|
ஆய
வெஞ்சுரத் தூடுசெல் லருணெறி யடைந்தார்
தூய வேதிய ரிருவருந் திகைத்துளந் துடித்தார்
மேய செம்பொருட் செல்வத்தை விழுத்திவெவ் விடர்சால்
தீய நல்குர வுறிலெவர் திகைத்திடார் ஜெகத்தில்.
|
42 |
|
|
|
|
வெயிலி
டைப்பட்ட புழுவெனத் துடித்தனர் வெம்பி
அயிலெ யிற்றரா விடந்தலைக் கொண்டென வயர்ந்தார்
குயிலு றுத்திய மாயமோ வென்றுளங் கொதித்தார்
செயலி னிப்பிறி திலையெனச் சிந்தனை செய்வார்.
|
43 |
|
|
|
|
ஆக்கை
நீறுபட் டழியினு மருணெறி விடாதிங்
கூக்கி முன்னுறி னித்திய ஜீவநாட் டுறுவேந்
தீக்கொ டுஞ்சுர மஞ்சியாந் திகைத்துப்பின் னிடையில்
மீக்கி ளர்ந்தெரி பாதலக் கிடங்கரில விழுவேம். |
44 |
|
|
|
|
பின்னிட்
டேழுதல் பிழைமுன்னிட் டேகுதல் பெருமான்
தன்னிட் டந்நல மாமெனச் சமைந்தனர் தக்கோர்
முன்னிட் டாருயிர் முடியினு முடிவரே யன்றி
வெந்நிட் டேகுவ ரோமுனை முகததுற்ற வீரர்.
|
45
|
|
|
|
|
வறிய
பாலையி னூடுமா காதிப னுய்த்த
குறிய ணுப்பிச காதுநேர் வழிநடை கூடி
மறியுங் கானனீர் வயங்கிய வளாகத்தை யுருவிப்
பொறிம யங்கியுள் ளுடைந்துமேய் யுணர்வொடு போனார்.
|
46 |
|
|
|
|
தாகம்
விஞ்சிநா வறண்டுத ராக்கினி தழைத்தும்
ஆக நொந்தல சிந்துணை விழிகுழிந் தாழ்ந்தும்
ஏகக் காலுல மின்றிநின் றிளைத்தவ லித்துஞ்
சோக முற்றன ரிடைக்கிடை தரித்திரை சூழல்.
|
47 |
|
|
|
|
இன்ன
ணந்தவித் திறுவரை காண்கிலா ராகி
மன்னி நின்றுகா லடிபெயர்த் தேகவோர் மார்க்கம்
முன்னு றுங்கொலென் றோரவாச் சிந்தையுண் முதிரச்
செந்நெ றிக்கணே சென்றனர் தெருமர லுழந்து.
|
48 |
|
|
|
|
பரிப
வச்சுழற் பட்டபஞ் செனநெடுந் தூரம்
பொரிப ரற்படு சுரத்திடைப் போயினர் போங்காற்
கரியு லத்தினுக் கயலுறத் தோற்றுதல் கண்டார்
விரிப சும்பயிர் வளங்கெழு மருதநீர் விபுலம்.
|
49
|