பக்கம் எண் :

414

  கதிவ ழிக்கரு கேகுமோர் சதிவழி கதித்துப்
பதிபு குத்தத ரோடுசேர் பாவனை தோற்றச்
சதிபு குத்துமென் றறிந்திடார் தரித்தவ ணின்றார்
மதிகெ டுத்திட வல்லது வறுமையே யன்றோ.
50
   
  வாட்ட முற்றுயிர் வதங்கிய ஆரியன் மற்றிப்
பாட்டை நன்னெறி சார்ந்துசென் றிறுவரை பரம
நாட்டின் பாதையை யடுப்பபோற் றோற்றுவ நலியுங்
காட்டை விட்டினிச் சேறுமிக் கவர்வழி யென்றான்.
51
   
  மாறில் வேதிய னுரைத்திட நம்பிக்கை மரபிற்
றேறு கையவித் தீச்சுரம் செருவிநேர் திரிந்து
சேறு மாயினிக் கவர்வழி சிறிதுசென் றப்பால்
வேறு பட்டிடி னென்கொலாய் விளையுமோ வென்றான்.
52
   
  நம்பி காண்டியிந் நலங்கெழு நானிலப் பரப்பும்
அம்பு யத்தட வாவியு மகன்குளக் கரையும்
பைம்பு லார்ந்தமென் பாதையும் பாலையூ டுருவி
உம்பர் நாடியோர்க் குய்த்தபே ருதவியே போலும்.
53
   
  ஐய தீங்குள வாமெனக் காண்கில னடைந்த
வெய்ய தீவிடாய் தணிந்துமேல் விரைந்துசே றற்குச்
செய்ய தாமெனச் சீரிய மறைவலான் செப்ப
மைய கன்றநன் மனத்துநம்பிக்கையு மருண்டான்.
54
   
  வறுமை யான்மதி நலங்கெடு மறிவுபோம் வாணாள்
குறுமை யாங்குண சீலங்கள் குன்றுமெய் குடிபோஞ்
சிறுமை மல்குவெந் தீவினை குடிபுகும் ஜெகத்தில்
மறுமை யாக்கமுங் கெடுமெனின் மறம்பிறி தெவனோ.
55
   
  இன்மை யிற்கொடீ தியாதெனி னின்மையிற் கொடிய
தின்மை யேயெனு மியற்றமிழ் முதுமொழி யின்னும்
இன்மை யென்னுமோர் பாவிமற் றிகபர நலத்தை
இன்மை யாக்குமென் றினிதற விசைக்குமா லெடுத்து.
56
   
  சாது மார்க்கத்த ரிருவரும் பாலையைத் தணந்தார்
மீது மார்க்கத்தி னருகுசென் னேர்வழி விரைந்தார்
தீது மார்க்கமென் றறிந்திலர் செவ்விதென் றுள்ளிப்
போது மார்க்கத்தி னலம்புனைந் துரைத்தனர் போனார்.
57