| |
திமிரமற வருமிரவி யொளிமழுங்கச் சுடரெறிக்குஞ்
செம்பொனிஞ்சி
சமரகித திரியேக சருவலோ காதிபதி
சருவசக்தி
அமரருல கமுமறியா ததன்மகிமை பெருமைகளை
யறிவமென்னில்
தமரநீர்க் கடலாழ நிரிவால்கொண் டளந்தறியச்
சமைவதொக்கும். 38
|
(பொ
- ரை) ஒப்புயர்வற்ற திரியேக தேவனும் சர்வ
லோகாதிபதியுமாகிய கடவுள் வேந்தனது சர்வ சக்தியே இருள்
நீங்கும்படியாக வருகின்ற சூரியனுடைய பிரகாசமும் மங்கிப்போகும்
வண்ணம் பிரகாசத்தை வீசுகின்ற சிவந்த பொன்னினாற் சமைக்கப்பட்ட
மதிலாகும். அதன் மகிமையையும் பெருமையையும் தேவலோகமும்
அறியமாட்டாது. அவற்றை நாம் அறிவோமென்று பிரயத்தனித்தால்
அஃது அலைகளோடு கூடிய நீர்க்கடலின் ஆழத்தை நரியானது தன்
வாலைக்கொண்டு அளந்து அறியப்புகுவதை யொக்கும்.
| |
புரக்கவருந் திருக்கருணைப் புத்தமுத கடமாம்பொன்
னகர்க்குநீதி
இரக்கசம ரசமாய திருக்கடைக்கோ புரவாயி
லெழில்கொண்டோங்கி
வரக்குருதிக் கறைதோய்ந்த வொருசிலுவை மணித்துவச
மலர்க்கைகாட்டி
நரக்குலத்தீர் வம்மினென விளிப்பதுபோன் றலங்குவன
நாலுதிக்கும் 39
|
(பொ
- ரை) நம்மை இரட்சிக்க வருகின்ற திருக்கருணையென்னும்
புதிய அமிர்தக்குடமாகிய இப்பொன்னகர்க்கு நீதியும் இரக்கமும்
சமரசப்படுகின்ற திருக்கோபுர வாசலில் இரத்தத்தின் கறை
தோய்க்கப்பட்ட ஒரு சிலுவைக்கொடியானது அழகோடு எழும்பி மலர்
போலும் அழகிய தனது திருக்கைகளைக் காட்டி மனுஷஜாதிகளே! நீங்க
ளெல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் என்று அழைப்பதுபோல நாலு
திக்கும் அசையும்.
| |
சூரியர்க ளொருகோடி தொக்குதித்த பரிசென்னச்
சுடருஞ்செம்பொன்
ஏரியங்கு புனிததிரு மாளிகைமற் றிதுவோ
க்ஷணியமுன்றில்
சீரியங்கு பரலோகத் திளவரசன் வீற்றிருக்குந்
தெய்வவீடு
தேரிலிதே நமர்குழுமி நித்தியஜீ வானந்தந்
தேக்குமன்றம். 40
|
|