|
என்னை
யென்னையென் றேங்கினர் வேதியர்
முன்ன ருற்றவன் மோசப்ப டுகுழி
தன்னுள் வீழ்ந்துத விப்புறு சத்தமென்
றுன்னி நின்றங்கு ரததுவி ளித்தனர்.
|
66
|
|
|
|
|
கத்து
துன்பக்க டுங்குர லன்றியோர்
உத்த ரம்பிறி தில்லென வோர்ந்தனர்
அத்த வெங்குற்ற னமென வாரண
வித்த கன்னுரை யாடலன் விம்முவான்.
|
67 |
|
|
|
|
மேக்கு
யாந்துரும் வெள்ளிடி வீழ்த்தெனக்
கூக்கு ரற்றொனி யுள்ளங்கு ளித்தலும்
ஆக்கை தம்பித்த லமர லெய்திமேற்
போக்கு முட்டிநின் றுள்ளம்பு ழுங்குவான்.
|
68 |
|
|
|
|
எங்குற்
றேனிஃ தெத்தனை துன்மதி
சிங்க வெங்குகை போலுந்தெ ரியினே
துங்க நூனெறிக் கும்மதி தூரமாம்
பொங்கு காரிருட் கங்குலும் போர்த்ததால்.
|
69 |
|
|
|
|
அழிவி
லாப்பர லோகம டுக்குநல்
வழிவி டுத்தனன் மன்மதி வாய்மையின்
மொழித டுத்தனன் பற்றினன் மோசமும்
பழியும் பாவமும் பற்றவிப் பாழ்வழி.
|
70 |
|
|
|
|
என்னை
யுங்கெடுத் தென்னுயிர் வான்றுணை
தன்னை யுங்கெடுத் தேன்றயங் குஞ்சுடர்
மன்னு விட்டிலம் மாணொளி மாய்த்துத்தன்
இன்னு யிர்க்கும்மி றுதிவி ளைத்தல்போல்.
|
71 |
|
|
|
|
இம்மட்
டும்மெற்கி ரக்ஷண்ய பாதையில்
தம்மட் டில்கிரு பைத்துணை தந்தவர்க்
கெம்மட் டுந்நன்றி யின்றியிங் கெய்தினேன்
அம்மட் டுக்குமி தெத்தனை யக்ரமம்.
|
72 |
|
|
|
|
தரித்தி
ரச்சுரஞ் சார்ந்தமெய்ந் நூல்வழி
பிரித்து வந்திவண் பேதுற்று யங்குவேன்
பரித்த பாழுட லோம்பிப்ப ரசுகம்
இரித்து விட்டதிங் கெத்தனை புன்மதி.
|
73 |