|
ஜீவ
ரக்ஷைதி ருததிய தேவர்கோன்
ஆவ லிததணைக் குங்கைய கற்றியிக்
கூவ லிற்கவி ழத்துணிந் தேன்கொடும்
பாவம் பாவம்ப ழிப்புறு பாவமால்.
|
74
|
|
|
|
|
மரண
பூமிம றிந்தவக் கங்குலுட்
கரண மோய்ந்துடல் கட்டறு காலையில்
அரண மாகிய ளித்தவ ருட்பரி
புரண மீண்டுமேற் போர்த்திடு மேகொலாம்.
|
75 |
|
|
|
|
இலகு
நூனெறி யைப்பிடித் தேகிடில்
அலகி லாதவ ருட்டுணை வாய்த்திடும்
உலகொ ழுக்கையு வந்துபு றஞ்செலில்
விலகி நீங்குமெய் வித்தக மென்பரால்.
|
76 |
|
|
|
|
ஆவ
தேற்றரு மாபுரிக் காரதர்
மேவி வெந்துகு வேளையில் வேந்தருள்
கூவி யென்னைக்கு ரவனு ருக்கொடே
ஏவி நல்வழிக் கீட்டிய தெவ்வணம்.
|
77 |
|
|
|
|
மேட்டி
மைத்திட ரேறிவி ழுந்தழி
கேட்டி னைப்பல வீனத்தின் கேதத்தைக்
காட்டிக் கைவிடுக் காதுக டைவரை
வீட்டி லுய்ப்பதன் றோவித்த கவருள்.
|
78 |
|
|
|
|
ஆத
லாலினி மேலும ழிமதிப்
பாதை நின்றுப தைக்கிலன் யானெனாப்
போத மேவித்தன் புன்மையைக் கைத்தருள்
நாதற் போற்றிந விற்றின னீதரோ.
|
79 |
|
|
|
|
கண்ணி
னுக்கென்க ருவிழ யாதியுன்
நிண்ண யச்சொலி னீர்மைநி னைந்திடா
தெண்ண மின்றியி யற்றின னிப்பிழை
புண்ணி யன்றொழும் பென்றுபொ றுத்தியால்.
|
80 |
|
|
|
|
என்று
கூறவெந் தாயுன்பி ழையென
ஒன்று மெண்ணல னுளளுடைய வாயலை
இன்று நேர்விக்கி னங்களே மக்கெலாம்
நன்று காட்டுமால் நம்புதி நீயென்றான்.
|
81 |