| |
இத்த
கும்பொறை யெய்திய சற்குண
வித்த கத்துணை தந்தவி மலனைச்
சித்த முள்ளுற வேத்தித்தெ ளிவுறீஇ
உத்த மந்திகழ் வேதிய னோதுவான்.
|
82 |
| |
|
|
| |
சீல
மல்குதி ருத்தகு செவ்வியோய்
மேலி னிச்செயல் வேறிலை மீண்டியாம்
பாலை மேவிநம் பாதையைக் கூடுதல்
சால நன்றெனக் கூறினன் றாபதன்.
|
83 |
| |
|
|
| |
நன்றி
தென்றுநம் பிக்கைதெ ருண்டனன்
சென்ற பாதையிற் சிந்தைவைத் துத்திரும்
பென்றோர் வாக்குமெ ழுந்தது விண்ணிடை
ஒன்றி யுள்ளுர முற்றன ரொள்ளியோர். |
84 |
| |
|
|
| |
மோச
நேரினு முன்னெனக் காகவென்
றேசி லாரிய னேகவு நம்பிக்கை
ஆசி லுள்ளம லசினை யாரிருள்
மூசு கானின்முற் செல்குவன் யானென்றான்.
|
85 |
| |
|
|
| |
இன்ன
வாகவி ருவரி னம்பிக்கை
முன்ன ரேகமு றையறி யாரியன்
பின்ன ரேகத்தி ருமிப்பி ரான்வழி
தன்னை யுள்ளித்த டவினர் கானெறி.
|
86 |
| |
|
|
| |
கொடிய
மாதிகி லும்பல்கு ழப்பமும்
அடிய ருள்ளத்த மளியும் போன்மெனத்
தடியும் பேரிடி யுந்தலைக் கூடுகார்
படியை மூடிப்ப ரந்ததவ் வொல்லையே.
|
87 |
| |
|
|
| |
கருமு
கிற்கண மீண்டிக்க கனமீ
துருமி டித்தொலி தாக்கலு முள்ளுடைந்
தரும றைக்கிழ வன்னிஃ தாழியான்
தரும கோபந்த லைவரல் காணென்றான்.
|
88 |
| |
|
|
| |
படிதி
கழ்த்திப்ப கல்பட மின்னிடுங்
கடிய காரிருள் போர்க்குங்க ணத்திடை
இடியி டித்துரும் வீழ்த்தலி னின்றொடு
முடியுங் கொல்லுல கென்னமு ழங்குமால்.
|
89 |