பக்கம் எண் :

419

  ஊதை மாருதம் பொங்கியு டற்றலிற்
பாத வங்கண்மு றிந்துப றிந்தன
ஒத நீரொருங் குண்டுடன் கான்றெனப்
பூத லத்துப்பொ ழிந்தபெ ருமழை.

90
   
  வான டர்ந்துபு டவிவ ளைத்திழி
சோனை மாரிவி டாதுசொ ரிந்திடத்
தான மெங்கும்பு தைந்துத லைத்தலை
மேனி மிர்ந்துப ரந்தது வெள்ளமே.
91
   
  பாரி டக்குழு வாமெனப் பம்பிய
காரி ருட்பிழம் புங்கரு மேகமும்
பேரி டிக்குர லும்பெரு மாரியும்
ஆரி யர்க்குயி ரச்சம்வி ளைத்தவே.
92
   
  உய்யு மாறரி தென்றுள முட்கினர்
செய்யு மாறறி யாதுதி கைத்தனர்
ஐய கோவென்ற வமதி யுள்ளினர்
வைய கத்துநெ றியும ருண்டதால்.
93
   
  வெள்ள மல்கவெ ருண்டுயிர் மாழ்கினர்
கள்ள மாயப்பொ றிசெறி காரிருட்
பள்ள மெம்மைப்ப டுக்குங்கொ லோவெனத்
துள்ளி யாவிது டித்தனர் தூய்மையார்.
94
   
  நிலைபெ யர்ந்திடி னேரும பாயமென்
றுலையு நெஞ்கினர் மின்னொளி யோங்கிருள்
வலைகி ழித்திட வல்லிதின் வந்தனர்
புலைநெ றிப்படு பாதியைப் போக்கியே.
95
   
  ஆச கன்றவ ருந்தவ ராருயிர்
மோச நேருமென றஞ்சிமுன் னிட்டிடார்
கேச ரிப்பகு வாயிற்கி டைத்தவோர்
பாச டைப்புழை யூடுறப் பற்றினார்.
96
   
 

வீங்கு காரிருள் போர்த்துவெ ருட்டலில்
தாங்க ரும்பல துன்பஞ்ச மழ்த்தலில்
ஆங்க ணைந்துதம் மாக்கைவி டாய்த்தலில்
தாங்கி னாரவர் துஞ்சின ராமென.

97