| |
ஆண்டு
வேதியர் சோகித்த யர்வுழி
ஈண்டு நல்வழி நீங்கலெ ளிததை
மண்டு பற்றன்மி கக்கடி னம்மெனக்
காண்டல் செய்தன னென்னுட்க வன்றரோ.
|
98
|
| |
|
|
| |
வேறு |
|
| |
|
|
| |
அந்தாபத
ரோரிரு வோரும யர்ந்து தூங்குங்
கொந்தாரிரு டுற்றுபு ழைக்கரு காய குன்றிற்
சந்தேகது ருக்கமெ னாவொரு சார்பில் வாழ்வோன்
வெந்தாபவி டக்கடு வன்னவி டாத கண்டன்.
|
99 |
| |
|
|
| |
நெறிதப்பிவ
ரும்பிர யாணரை நேர டர்த்து
மறியற்சிறை யிட்டுயிர் வாதைசெய் வன்க ணாளன்
பொறிபுக்குழ லப்படு தீமைபு ணர்க்கும் வம்பன்
உறவுற்றல கைக்கழி துன்மதி யூட்டு கிற்போன்.
|
100 |
| |
|
|
| |
நீசங்கையா
யின்வளர்த் தூட்டுநி ருதி மோச
நாசங்கைவந் ததொழி லாணர ராவி யுண்ணப்
பாசங்கைவந் தபடை யாள்படு நீல யாய
ஆசங்கையென் னுமழிம் பிக்கடி யாம ணாளன்.
|
101 |
| |
|
|
| |
இப்பாதக
ராக்கத னாளுமெ ழுந்து லாவி
வெப்பாலையை யஞ்சிமெய்ந் நூனெறி விட்டு நீங்கி
அப்பாலுறு வாரையி ருஞ்சிறை யாக்கி யாக்கி
எப்போதும்வ தைத்துயி ரூட்டுவ னில்ல வட்கே.
|
102 |
| |
|
|
| |
நெறிநீத்திரு
வேதிய ருற்றிடு நீர்மை தேரான்
பொறியாத்தவ ரையடித் தாருயிர் போக்கி யுண்டு
வெறியாட்டின்ம யங்கிநி சாசர வெம்ப சாசன்
பிறியாதபெ ருந்துயில் கூர்ந்தனன் பேய்ச்சி யோடும்.
|
103
|
| |
|
|
| |
அன்னோநெறி
விட்டய லேகிய வாத்த ரானோர்க்
கென்னோபுரி வாமென நாடியீ டேற்ற மார்க்கம்
இன்னேநனி காட்டுவ லென்றெழுந் தீண்டு வான்போல்
துன்னாரொளி வீசியெ ழுந்தனன் ஜோதி வெய்யோன்.
|
104 |
| |
|
|
| |
விடிகாற்றுயில்
வீசியெ ழுந்துவிடாத கண்டக்
கொடியோனுரி மைப்பழ னக்கொடு வேலி சூழ்ந்த
படிமீதுந டந்திசை தேர்வுழி யாங்கொர் பாங்கர்
அடியார்துயி லப்படு நீர்மைகண் டாங்க ணைந்தான்.
|
105 |