| |
கண்டானிரு
வர்கதி மார்க்கங்க டைப்பி டித்த
ஒண்டாபத ரென்பதை யுய்த்துணர்ந் தானு ரப்பித்
திண்டோள்புடைத் தான்சின விக்கறு விச்சி ரிப்புக்
கொண்டானவ ரும்விழித் தாரிது கூற லுற்றான்.
|
106
|
| |
|
|
| |
அஞ்சாதென்னெல்
லையடி வைத்திடற் கார்கொ லாநீர்
எஞ்சாதசு ரத்தெரி யிற்கொடி தென்சி னத்தீ
பஞ்சாகநும் மைத்தகிக் கும்மது பற்றி யாவி
துஞ்சாதமுன் னஞ்சொலத் தக்கன சொற்றி ரென்றான்.
|
107 |
| |
|
|
| |
தீயோனிலை
கண்டற வோருளந் தீந்து மாயப்
பேயேநிரு தவ்வுருக் கொண்டுழல் பெற்றி யீதென்
றாயாநிலை நின்றசை யாதறி வாக்கை குன்றிச்
சியோன்மலை நோக்குபு வந்தனஞ் செந்நெ றிக்கே.
|
108
|
| |
|
|
| |
செல்லாறிழுக்
கிமருண் டிந்நெறி சேர்ந்து நேற்றை
அல்லார்பொழு திற்புயல் வானம டர்ந்து பெய்த
நில்லாமழைக் கொல்கிநன் னூனெறி நேடி யேக
ஒல்லாதொதுங் கியிவ ணுற்றன முற்ற தென்றார்.
|
109 |
| |
|
|
| |
என்றிங்ஙன
மாரியர் கூறலு மேத டாநீர்
நன்றுற்றப சும்புன்மி தித்துந டந்து ழக்கிக்
குன்றுற்றவெ னைக்குணி யாதுகு லாவி யிப்பால்
ஒன்றித்துயி லும்விளைத் தீரெதி ருத்த திப்பீர்.
|
110 |
| |
|
|
| |
அருளைத்துணை
யாக்கின மென்றெம தாணை யாய
இருளைப்பகைத் தீரொளிக் கோர்பக லென்ப தோரீர்
பொருளைக்கெடுத் தென்னை நீவிர்பு றக்க ணித்த
தெருளைக்கெடுத் தும்முயி ரார்குவ றிண்ண மோர்மின்.
|
111 |
| |
|
|
| |
மலைவாரண
வாய்க்கரும் பும்புலி வாய்ப்புல் வாயுஞ்
சிலையாருரல் புக்குலக் கைக்கிடை சேர்ந்த வும்பின்
புலையீர்புறம் போந்திடு மோவுயிர் போக்கு காறும்
உலைவாய்க்கம டத்தின்ம கிழ்ந்துயி ரோம்பு மின்னே.
|
112 |
| |
|
|
| |
என்முன்னுற
வேகுதி ரென்றெதி ரேந டாத்திப்
பின்முன்வில காதய லேகினன் பேய னாண்டு
மன்முன்னெற தப்பிய மாதவர் வாய டங்கி
முன்முன்னுறச் சென்றன ராரருண் மொய்ம்பு குன்றி.
|
113 |