| |
வெஞ்சீயமி
ரண்டிடை யேகிய வீர முங்கண்
டஞ்சாதழிம் பர்ப்பொரு தோட்டிய வாற்ற லும்பின்
எஞ்சாமர ணத்திருட் சூழல்புக் கீண்டு மொய்ம்பும்
விஞ்சாரண னைவில கித்தனி விட்ட மாதோ.
|
114 |
| |
|
|
| |
அந்தோவளி
திவ்வற நூனெறி யாக்க நீப்பின்
நந்தாவொரு செல்வமு நன்மையு நண்ணு மேயோ
முந்தாரிரு ளும்பல தீமையு மோச மும்பல்
சிந்தாகுல முந்நடுத் தீர்வையுஞ் சேர்வ தல்லால். |
115 |
| |
|
|
| |
நல்லாறிகக்
கும்மதி மோசமோர் நச்ச ராவின்
பொல்லாவிடத் திற்புகுந் துள்ளுறப் புத்தி மாழ்கி
எல்லாநல மும்பறி போயதென் றேங்கி யேங்கிச்
சொல்லாடலின் றிவறி தேகினன் சூழ்ச்சி மிக்கான். |
116
|
| |
|
|
| |
பம்பிப்பர
வும்படு நாசப்ப ரப்பி னின்றும்
இம்பர்க்கரை யேற்றியீ டேற்றமி சைப்ப ரல்லால்
உம்பர்க்கர சன்னொறுக் காரென வுள்ளி யுள்ளி
நம்பிக்கைநம் பிநடந் தான்மறை நண்ப னோடே. |
117 |
| |
|
|
| |
இவ்வாறிரு
வோரைந டாத்தியி கழ்ந்து பேசி
வெவ்வாயரக் கன்வழும் பூன்முடை மிக்கு நாறித்
தெவ்வாயிருள் துற்றுசி றைப்புறஞ் சேர்த்தவ் வொல்லை
அவ்வாயில டைத்தர ணாக்கிய கன்று போனான். |
118 |
| |
|
|
| |
போனானபுலைப்
பேய்மனை யாட்டிபாற் போந்தென் னாவிக்
கானாவமு தேயனை யாயுன தாணை யெல்லை
வானாட்டர சன்றொழும் போரிரு மாந்த ரைக்கண்
டூனாரவெண் ணிச்சிறை யுய்த்தன னுற்ற தென்றான். |
119 |
| |
|
|
| |
நன்றிங்கிது
நாயக நீநரர் பக்க னாளைச்
சென்றங்கவர் நோகவ டித்திசி னந்து தாமே
பொன்றும்வகை யாயதுர்ப் போதனை போதி யென்னாத்
துன்றுங்கொலை பாதக வம்பிது ணிந்து சொன்னாள். |
120 |
| |
|
|
| |
தங்காதலி
சொற்றலை மேற்கொடி ராத்த ணந்து
வெங்காலதண் டிற்கொடுங் கோலைவ டாத கண்டன்
பொங்காலமென் னச்சின விச்சிறைச் சாலை போந்து
அங்காரண ரையடித் தான்கைய லுக்கு மட்டும். |
121 |