| |
தண்டித்துநின்
றுகெடு வீரினிச் சாரு கில்லீர்
பண்டுற்றமார்க் கம்படர் வேமெனும் பாழ்நி னைப்பைத்
துண்டித்துவிட் டுத்துணிந் தாருயிர் சோரு மாறு
தெண்டிக்கொளி னன்றியிப் பாடணுத் தீர்வ தின்றால்.
|
122
|
| |
|
|
| |
நஞ்சுண்டுசா
மின்மன மின்றெனி னாணி கொண்டு
துஞ்சுண்டுபோ மின்னல தாவிதொ லைக்கு மேதி
எஞ்சுண்டதல் லையுல கத்தினி யீறு காறும் அஞ்சுண்டடி
யுண்டுயி ரோம்பலி னாவ தென்னே.
|
123 |
| |
|
|
| |
வெயிலுற்றபோ
துபனி பற்றற வீயு மாப்போல்
அயிருற்றனை யகடுந் துன்பம டர்ந்த காலை
செயிருற்றபத் திநடை பற்றறத் தீர்ந்து பின்னும்
உயிருற்றனிர் வெட்கமில் லீர்கதி யுள்ளு தற்கே.
|
124 |
| |
|
|
| |
என்றின்னன
பன்னினன் வாய்செறித் தேகி னானவ்
வன்றிண்புய வல்லரக் கன்மனை மாடு நோக்கி
அன்றின்னல டைந்துயிர் கைத்தழு தாக்கை நொந்து
நின்றங்கினை யும்மிரு வேதியர் நீர்மை தேர்வாம்.
|
125 |
| |
|
|
| |
வேறு |
|
| |
|
|
| |
பற்றுவி
டாத கண்டக னென்னும் படுபாவி
சற்றுமி ரக்க மின்றிவ தைக்கச் சமையோடும்
முற்றுமு ழந்தா ராக்கைத ளர்ந்தார் முனிகில்லார்
சொற்றில ரேதுந் தம்பிழை யுள்ளித் துரிசில்லார்.
|
126
|
| |
|
|
| |
துஞ்சிருள்
பூமி நஞ்சுகு முண்ணி துருநாற்றம்
வெஞ்சிறை யின்ன சஞ்சல மாய விடமேறி
எஞ்சுவ தென்னீ ரஞ்சலி ரென்பா ரிலராகப்
பஞ்சர முற்ற கிள்ளையின் மாழ்கிப் பரிவுற்றார்.
|
127 |
| |
|
|
| |
வேதனை
யாற்றான் வேதிய னுள்ள மிகநொந்து
காதக னென்னோ ஜீவனை வாங்கக் கருதாது
நோதக விட்டுப் போயினன் யானிந் நுகர்துன்பஞ்
சாதலி னன்றித் தீருவ தேயோ தகவுள்ளில்.
|
128 |
| |
|
|
| |
என்னே
யென்னே மன்னருள் வேண்டி யெரிபாலை
பின்னே யாக முன்னடை கூடிப் பிழையாமே
கொன்னே சோரக் குக்கலின் வன்கோ லடியுண்டிங்
கின்னே சாவாக் குற்றுயி ரொடுநைந் திறுமோசம்.
|
129
|