|
என்னோ
டன்றித் தன்னுயி ரென்னா வெனைநட்ட
இன்னா னுக்குங் கேடுவி ளைத்தே னிவன்விண்ட
பொன்னே யன்ன நன்மதி தள்னிப் பொறியற்றேன்
அன்னோ வின்னு நச்சுயி ரோம்பி யழிகின்றேன்.
|
130 |
|
|
|
|
சும்மைவி
ழுத்திச் சிலுவைதி கழ்த்தித் துரிசில்லாச்
செம்முறை நல்கி யேகென வுய்த்த திரியேகர்
மும்மைய ருட்கா ளாயிது காறு முடுகுற்ற
திம்மையி ருட்டுத் தீச்சிறை யுட்பட் டிடவேயோ.
|
131 |
|
|
|
|
இத்தரை
மீதினி லென்னிகர் பாவிய ரெவருள்ளார்
பித்துறு பேதைபெ யர்த்தடி வைத்த பெரும்பாவம்
எத்தனை யோகொடி தெத்தனை யோபெரி திதுதேரில்
நித்திய நாசம டுத்தது மேலினி நினைவென்னெ.
|
132 |
|
|
|
|
நன்றிம
றந்தே னல்லுணர் வற்றே னவையுற்றேன்
இன்றுணை வற்கொண் டின்னல ளக்க ரிடையுய்த்தேன்
கன்றிய ரக்கன் வல்லடி யுண்டு கரைகின்றேன்
பொன்றலு மில்லே னென்செய வுள்ளேன் புலையேனே.
|
133 |
|
|
|
|
ஆன்மசு
கத்துக் காயிக வாழ்வை யறவீசி
ஊன்மலி துன்பை யூடுரு விப்புக் குயர்சீயோன்
வான்மலை முன்றில் வந்தும்வி ழுந்தேன் மதியற்றிக்
கான்முழை யந்தோ நன்றிது நன்றென் கதிநாட்டம்.
|
134 |
|
|
|
|
பூதல
மெள்ளிச் சீயென வையும் புலையேனை
மீதல முங்கொள் ளாதுவி டுக்கும் விசுவாச
காதக னீச னென்றினி யென்னே கடையாய
பாதல மொன்றே கொள்ளவி ருந்தேன் படுபாவி.
|
135 |
|
|
|
|
பேணா
தாவி யூனுடல் பேணிப் பிழைபட்டேன்
வாணா ளல்கிற் றாரிருண் மூடி வதையுண்பேன்
சேணா டெட்டிப் போகவி டுத்தேன் திமிரார்வங்
காணா நின்றேன் புல்லுயிர் பொன்றுங் கடைகாணேன்.
|
136 |
|
|
|
|
என்னம
னங்கைத் தின்னன பன்னி யிடருற்றான்
பொன்னக ரந்தோ போக்கின னென்னாப் பொருமுற்றான்
தன்னிக ரில்லாத் தற்பர ராஜன் சமுகத்துத்
துன்னவு நாணி மூர்ச்சைய டைந்தான் துரிசில்லான்.
|
137 |