|
ஆரிய
னவ்வா றாற்றல னாகி யயர்வெய்தக்
கூரிய வைவேல் புண்படு நெஞ்சு குளித்தென்னப்
பேரிடர் துற்றி யாவிய ழுங்கிப் பெரிதேங்கிச்
சீரிய நம்பி்க் கையுமுள முட்கித் தெருமந்தான்.
|
138
|
|
|
|
|
பின்றையும்
வெய்யோ னுற்றுயி ரோம்பும் பிணமன்னீர்
இன்றொரு காலு மீட்சிநு மக்கிங் கினிநீரே
கொன்றுகொ ளிற்றுன்பொன்றுமி லென்புக் குவைகாண்மின்
முன்றிலி னென்னாப் போயினன் வைது முனிவோடும்.
|
139 |
|
|
|
|
புந்திசி
றைப்பட் டாரழல் தீண்டிப் புகர்புல்லி
முந்துச னிக்கண் மாலைய டைந்து முழுதுந்தாம்
வெந்துய ரன்றி வேறுண வேது மிசையாராய்
நந்துறு காலை வேதிய னின்ன நவிலுற்றான்.
|
140 |
|
|
|
|
வேறு |
|
|
|
|
|
எம்பி
நின்சொலி கந்துள வென்மதி கேடுந்
தம்பி ரானெறி விடடசண் டாளமுஞ் சார்ந்து
வெம்பி யீண்டுவி டாதகண் டப்பெயர் மேவிக்
கும்பி வாதைகொ டுப்பதிங் கென்செயக் கூடும்.
|
141 |
|
|
|
|
தேவ
கோனகர் கிட்டிய தென்றுசெ ருக்கிப்
பாவ காரியிப் பாழ்ஞ்சிறைப் பட்டனெ னந்தோ
கோவி ளங்கும ரேசனைக் கூவிளிக் கொள்ள
நாவெ ழும்புகி லாதுள முட்கிடு நாணி.
|
142 |
|
|
|
|
வல்ல
ரக்கனோ டேயம ராடிடும் வன்மை
நல்ல ருட்டுணை யோடுகை விட்டது நம்பி
கொல்ல வுங்கரு தான்புரி யுங்கொடு வாதைக்
கெல்லை யில்லையிப் பாட்டினுக் கெத்தனை வைகல்.
|
143 |
|
|
|
|
பெருக்க
வாதையோ டாத்தும ஜீவியம் பேணி
இருக்கை தன்னிலு மாவியை யெவ்வகை யேனும்
நெருக்கி யொல்லைவி டுத்திற வெய்தலும் நேரெ
ஒருக்கு சாவுமு வப்பெனக் குண்மையி தோர்தி.
|
144 |
|
|
|
|
வள்ள
லுய்த்தவ ருட்பய னோவறும் பாலைக்
கொள்ளை யிற்பறி போயின வுள்ளக்கொ திப்பே
எள்ளி யென்னைய டர்த்தலி னென்னுயிர் மாய்ப்பான்
உள்ளம் வைத்தனெ னீதென துள்ளுறை யென்றான்.
|
145 |