|
கரவி
லானுரை காதுறக் கேட்டுநம் பிக்கை
விரவு துன்பிற்கு வெந்நிட லோநம வீரம்
பரவை வைப்புக்கி யற்கைபன் மாறுதல் பாராய்
இரவு முண்டுப கலுமுண் டேனுனக் கின்னல்.
|
146 |
|
|
|
|
சுருதி
யுத்திய நுபவந் தூயசன் மார்க்கங்
கருது முத்தம பத்தியென் றாயக ணக்கில்
ஒருதி றத்துமொவ் வேனெட்டு ணையுனக் கேனுந்
தருதி யீண்டுவி டைசிறி யேன்சில சாற்ற.
|
147 |
|
|
|
|
புரவு
நூனெறித் தத்துவ போதத்திற் போந்த
கரவி லாமெய்ய நுபவக் காட்டிசயை காணும்
உரவு நீருல கத்தையு வர்த்துளை யுண்மைக்
குரவ னீயெனக் கென்ளுமி தென்மனக் கொள்கை.
|
148 |
|
|
|
|
ஐய
நம்மது தாபநி லைபர மாயில்
வெய்ய நிர்ப்பந்தம் வேறிலை யித்துயர் மேவி
நையுஞ் சீவனி லும்மர ணம்மிக நன்றாம்
மெய்ய தாயினும் விள்ளவொன் றுள்ளது மேலோய்.
|
149 |
|
|
|
|
மாக
மாநக ராதிபன் வன்கொலை செய்யாய்
ஆக வென்றத றிந்தும றிந்தில ரேபோற்
சோகம் விஞ்சியன் னோதற்கொ லைத்தொழல் சூழ்ந்து
சாக வெண்ணுத லோதரு மந்தனித் தக்கோய்.
|
150 |
|
|
|
|
ஆக்கை
யைத்தனி யாவியை யாக்கையு மாக்கிக்
காக்கை யும்முடை யாருளர் நாம்பகை காட்டிப்
போக்கை யுள்ளுவ தோபுல மைத்தன்று பொய்யா
வாக்கை யுள்ளுதி வாய்த்திடு மோநித்ய வாழ்வு.
|
151 |
|
|
|
|
எதது
ணைப்பெருந் துன்பமு னக்குள வேயோ
அத்து ணைப்பெருந் துன்பமு மெற்குள வாக
வித்த கத்திற லோய்சிறி யேனினும் வெம்பிச்
சித்த நொநதுயிர் தீர்வலென் பாயிதென் சீர்மை.
|
152 |
|
|
|
|
ஒன்றி
யாயெதிர்த் தப்பொல்லி யோனையு மோட்டி
வென்றி கொண்டுக தித்தனை வெவ்விரு ளார்ந்த
பொன்று பௌவம்பு குந்துநெ றிக்கொடு போந்தாய்
குன்று குன்றென நேரவுங் குன்றிலை கொற்றம்.
|
153 |