பக்கம் எண் :

427

  வஞ்ச மாயக்க டைப்புர ளிக்கும்வம் புக்கும்
வெஞ்சி றைக்கும்வி லங்குக்கும் வெந்துய ருக்கும்
துஞ்ச லுக்குந்து ளக்கமில் லாமனத் தூயோய்
அஞ்சு கிற்றிகொ லாமிவ்வ ரக்கனுக் கைய.
154
   
  கருதி னெம்மட்டுக் குங்கடுங் கோலதி காரம்
நிருத னுக்குச்செ ருந்திரு வுள்ளநி னைப்பின்
பிருது விக்கணின் றாஞ்செறுத் தெத்தனை பேரோ
பொருது மற்றிவன் கையகன் றுய்ந்தனர் பூர்வம்.
155
   
  எந்தை யென்னைம றந்திடர்ப் பட்டனெ னின்னே
முந்தை போலரக் கன்னிவண் முன்னிடில் யானே
புந்தி யோடெதி ரூன்றிப்பு றந்தந்து போகத்
தொந்த யுத்தத்த டர்க்குவ னீமதி சோரேல்.
156
   
 

மருளி னெய்தின மாலிம்ம றக்கொடுஞ் சூழல்
இருளி னம்பல வீனத்தி யற்கையை யீசன்
தெருளு றுத்தினர் நித்திய ஜீவசெல் வத்தை
அருளி னாக்கம ருளுமெ னற்கைய மின்றால்.

157
   
  அந்த ணர்க்கரு ளிட்டிகை யாமற வோய்நின்
சிந்தை மற்றிது சீரிதன் றாலுயிர் தீய
வெந்த ழற்கிரை யாயினு மிப்படு வெட்கம்
நந்த மைத்தொட ராவகை நாடுதி நல்லோய்.
158
   
  என்று கூறினன் வேதியற் கோர்விகற் பின்றி
நன்று வான்கதிப் பற்றுவி டாதநம் பிக்கை
மன்றல் வாசகங் கேட்டலு மாதவன் சிந்தை
யொன்றி நின்றங்கு ரத்தது மென்மெல வூக்கி. 159
   
  திருந்து நம்பிக்கை செம்மொழித் தேனொடு சேர்ந்த
மருந்தெ னாநன்கு ணர்ந்துதன் வண்செவி வாயா
அருந்தி னான்மறை வாணன கத்தருள் பூப்ப
வருந்து மாவித ளிர்த்தது மாண்டழை மல்கி.
160
   
  குளிர்ந றும்பொழி லூடுகு லாயபைந் தென்றல்
வளிய கச்சிறை யூடும றிந்திட வல்லே
தெளிவு தோன்றித்தி ருத்தகு வேதியன் சென்றான்
அளிப டர்ந்தவ ருட்கிரு பாசனத் தண்டை.
161