பக்கம் எண் :

429


9. சுத்தனோ வல்ல னன்மை சொல்லவெட் டுணையு மில்லேன்
பித்தனான் பெரிய பாவி பிழைக்குமா றுணர மாட்டேன்
நித்தநீ யருளு மீவை நினைகிலே னன்றி யீனம்
எத்தனை யிறைவ னேயா னென்செய்வான் றோன்றி னேனே.

 
10. மெய்த்திடப் பிறர்க்கு வேதம் விளம்புவன் விரித்தெ னுள்ளே
உய்த்ததை யுணர மாட்டே னொழுக்குடை யவர்போ னின்றுங்
கைத்திடேன் பாவப் பிச்சைக் கடுகிநாட் கழிய வாளா
எய்த்திளைத் தயர்ந்தே னெந்தா யென்செய்வான் றோன்றி
                                           னேனே.
 
11. அழுகிலேன் மனங்க சந்திட் டளியனேன் பிழையை யுன்னி
விழுகிலே னின்பா தார விந்தமே கதியென் றேத்தித்
தொழுகிலே னாவி யாலே தொடர்பவத் துயிலை நீத்திங்
கெழுகிலேன் ஈச னேயா னென்செய்வான் றோன்றி னேனே.
 
12. பன்முறை யிதய மென்னும் படகரைப் பார்க்குந் தோறும்
நன்மையோ ரணுவுங் காணே னஞ்சினை யமுதா நச்சும்
புன்மையேன் போத மில்லேன் புவிப்பொறை யாய தன்றி
இன்மையேன் பயன்மற் றெந்தா யென்செய்வான்
                                  றோன்றினேனே.
   
                   தேவாரம் முற்றிற்று.

     
                        வேறு  
     
  இன்னவா றகத்துத் தேம்பி யெழின்மறை வாணன் றேவ
சந்நிதி யடைந்து போற்றிச் சனியிரா விடிமட் டாக
மன்னிளங் குமரன் செய்ய மலரடி வலிந்து பற்றி
அந்நிலை விடாது நின்றா னருட்டுணை யணுகுங் காறும்.
163
   
  உலகிரு ளகற்றி வெய்யோ னுதயத்துத் திகழா முன்னம்
அலகிலாக் கருணைப் பௌவத் தருட்கதி ரலர்ந்து தோன்றி
இலகொளி பரப்பிச் சிந்தை யிகலற நூறிப் போர்ப்பப்
பலகலை ஞானி யுள்ளம் பத்தியாற் சொலித்த தன்றே.
164
   
  அகத்தொளி மலித லாலே யாரிய னயர்தி நீங்கி
மகத்துவ தெய்வ வேந்தை மனமொழி யார வாழ்த்தி
மிகத்துதி பகர்ந்து போற்றி மெய்யெலாம் புளகம் போர்ப்ப
முகத்தெழில் குலவி நம்பி கேளென மொழவ தானான்.
165
   
  பொங்குபே ரின்ப நாட்டுப் புரவல னருளே யீண்டு
மங்கொளி விளக்கைத் தூண்டி வளர்த்திய வண்ண நின்வாய்த்
துங்கவாக் குருவாய்த் தோன்றித் துயல்வரு மனச்சந் தேக
வெங்கொடு மயலி னின்று மீட்டெனைப் புரந்த தின்னை.
166
   
  உஞ்சன முஞ்ச மென்னின் னுயிரனா யொல்லை யேயிவ்
வெஞ்சிறைக் கதவின் வன்றாள் திறந்தியாம் வெளிப்பட்
                                       டுய்வான்
சஞ்சல மிகுசந் தேக துருக்கத்தைத் தணந்து போக
எஞ்சலில் கருவி யாய திறவுகோ லுளதொன் றென்பால்.
167