பக்கம் எண் :

430

  மற்றது பரம சீயோன் மலைக்கதி பதியே நல்கப்
பெற்றனெ னெறிதி றம்பு பீழையான் மனக்க லக்கம்
உற்றியா னுணர்ந்தேனல்ல னொள்ளியோ யெழுக வென்னாத்
தெற்றெனக் கோலை யிட்டான் றிறந்தது சிறைக்க பாடம்.

168
   
  திறந்தது சிறைக்க பாடஞ் செல்வியோ ரிருவர் சிந்தை
அறந்திகழ் ஜீவன் முத்தி யணிநக ரத்தின் வாயிற்
சிறந்தசெம் பொற்க பாடந் திறந்தென வுவகை பூப்ப
மறந்திகழ் சிறையொ ரீஇப்பின் மதிற்றலைக் கடையைக் கிட்டி.
169
   
  மெய்த்தகு திறவு கோலின் வியன்கடைக் கதவு மேய
சித்தசஞ் சலமும் வீசிச் செவ்வனூ னெறியைச் சேர்வான்
வித்தகர் விரைந்து சென்றார் கதவொலி விழிப்புக் கூட்டப்
பத்தாகை யகன்றா ரென்னாப் பரிந்துளம் பதைத்தான்
                                      வெய்யோன்.
170
   
  ஒல்லையி னெழுந்து பின்சென் றோடினா னுரப்பி னானங்
கல்லைநூ றிரவி யோங்கி யலர்தலிற் கையுங் காலும்
புல்லிய திமிரால் யாண்டும் போக்கற்று விழுந்தான் பொங்கி
எல்லையி லகங்கா ரத்தா லீடுபட் டழிந்தா னிப்பால்.
171
   
  மாதவர் ஜீவ பாதை மருவுமட் டாக வோடிப்
போதரீஇ விடாத கண்டப் புலைமக னெல்லை தாண்டி
வேதநூ னெயிறிற் புக்கு விட்புலத் தரசன் செய்த
மாதயை யுள்ளிப் போற்றி வணங்கினார் வழுத்திப் பல்கால்.
172
   
  வறுமையா னெறிதி றம்பி மானத்தீக் கொளுவி யாவி
குறுமையுற் றயருங் காலை கொளுநிதிக் குவைதொக் கார்போல
தெறுமழற் பாலை யஞ்சிச் சிறைமறிந் தயருங் காலை
பொறுமைவேந் தருள்வந் துய்ப்பப் பூரித்தா ருள்ளந் தூயோர்.
173
   
  ஒளவிய மவித்த சிந்தை யாரிய ராறித் தேறிச்
செவ்வழிப் போக்க ரீண்டு திகைத்துள மருண்டு நம்போற்
றெவ்வழி விடித்துத் தீங்கு திளைப்பரா லென்னச் சிந்தித்
தவ்வழி விலக்கி யுய்ப்பா னாய்ந்துமற் றிதனைச் செய்தார்.
174
   
  அருஞ்சுர மஞ்சி நேருக் கயல்வழிப் படிற்சந் தேக
இருஞ்சிறைத் துருக்கம் புக்காண் டின்னல்செய் விடாத கண்டப்
பெருஞ்சழக் கனுக்காட் பட்டுப் பேதுற வருமந் றென்னாக்
கருஞ்சிலை பொறித்தாண் டூன்றிக் கதிவழி காட்டி யுய்த்தார்.
175
   
            விடாதகண்டப் படலம் முற்றிற்று.