|
|
|
|
இனையன
நிகழ்ந்த பின்ன ரெமக்கினி நிருதன் செய்யும்
வினையெது மின்றா மிந்த வித்தக ராஜ வீதி
தனையவ னணுகா னென்னாத் தம்மிலே யுவந்து பேசி
முனைவனைத் துதித்தார் பல்கான் முறையறி ஜீவன் முத்தர்.
|
1 |
|
|
பானமு
மின்றி நானாட் பசித்தலில் ஞான ஜீவ
போனகந் திருத்தி யுண்டு புத்துயி ரடைந்து தேவ
ஆனக முழக்கங் கேட்கு மானந்த சைல நாடி
வானெறி மருவிப் போனார் வானெறி மருவி வந்தார்.
|
2 |
|
|
காதவ
மிரண்டு மூன்று கடந்துசென் றிடுது மாயில்
ஜீவவா னந்த மல்குஞ் செழுங்கிரி சேர்து மென்னா
ஆவலித் தறவோர் சிந்தித் தடுத்தடுத் தேக வேகத்
தாவரு வசந்த மென்கால் தவழ்ந்ததச் சாரனின்றும்.
|
3 |
|
|
குளிரிளந்
தென்றன் மேனி குளித்தலுந் தளர்வு நீங்கி
இளிவரு ஜென்ம தோட மிரிந்துபே ரின்ப மல்க
நளினமொத் தலர்ந்து செவவி நகைமுகந் திகழத் தூயர்
களிமகிழ சிறப்பச் சென்று கனகமால் வரைகண் ணுற்றார்.
|
4 |
|
|
வேறு.
(சந்த விருத்தம்.) |
|
|
|
புதுவிரை
மதுமலர் பொதுளிய முதுசினை பொழலுழை தழுவுல
புயல்
வதுவையினதிபதி பொருவரு கிருபையின் மலைதலை பொழிவள
மழை
அதிரிடி முழவெழ வரிமுரல் சுருதியி னகவுவ மகளிரின் மயில்
மதுரிய நறைகுட மடிபடி யுகுபய னளவிய விளைவன வயல்.
|
5
|
|
|
மாலுறு
கொடுமுடி மணியணி யெனவிழு மருவிகள் பொருவன
தடம்
வாலிய திருவருள் பொருபெரு வளநனி மருவிய பெருவர நதி
கோலிய ஜெபதப விரதரும் வரதரும் வரன்முறைகுடைவன துறை
பாலடை மலைமிலை பரிசென விரசுவ பருவர லொருவுறை பனி. |
6 |
|
|
மழகளி
றெழி லுளையரிவரி யுழுவைக ளுழைவிழை
வொடுதிரிவனம்
தழலென வொழுகொளி தழுவிய கொழுமுகை தழையொடு கெழு
முவ தரு
கழுதுக ளுழுதுழு திதழவிழ் செழுமலர் களகள சொரிவன மது
பழுதறு கிரியையி னெழுதுணர் விரியலா பலதிசை கமழுவ கடி.
|
7
|