அடிமுறை
யிடுதவ மகளிரி னணிநடை பயிலுவ பிடிமட வனங்
கொடியிடை யவர்மொழி யிசைவழி பழகுவ குலவிய கிளியொடு
குயில்
வடிவழ கியவிரி சிகையுடை குடிகுண மரபியல் பழகுவ மயில்
நொடிகு வதெவனவ ரமுதுகு கடைவிழி நுதயொடு பழகுவவருள்.
|
8
|
|
|
வேறு |
|
|
|
ஜகநெறி
யொருவிய தவநெறி மகளிர்
முகமென வலருவ நறைகமழ் முளரி
தகவுடை யவர்நகை தவழ்தரு துவர்வாய்
நிகரென வலருவ நிலவுறு குமுதம். |
9 |
|
|
ஏந்திழை
யவரொளி திகழெயி றெனவே
தேந்தள வணிநறு முகையிணர் செறிவ
மாந்தளிர் புரைவடி வினர்கர மருளக்
காந்தள மலர்நனி கஞலுவ ககனம். |
10 |
|
|
குணவணி
தழுவுவர் குலமட மகளிர்
தணிவரு மறநெறி தழுவுவர் புருடர்
மணியொலி தழுவுவ சினகர மறையின்
திணிசுடர் தழுவுவ திகழ்தரு மிதயம்.
|
11 |
|
|
மதிநல
மருளுவ மறுகூறு சுருதி
துதிநல முருளுவ வடியவர் தொகுதி
நிதிநல மருளுவ நிறைதரு சுகிர்தங்
கதிநல மருளுவ ககைமழ் சைலம். |
12 |
|
|
வடிவன
மிடைவன மகளிரி னுலவிக்
கொடிவன மிடைவன துடியிடை குலவித்
தடிவன மிடைவன வெழிலொளி தழுவிக்
கடிவன மிடைவன சினைமலர் கஞலி.
|
13
|
|
|
மனைதொறுந்
திகழுவ மறையொளி விளக்கம்
வினைதொறுந் திகழுவ விதிதரு புனிதஞ்
சினைதொறுந் திகழுவ கொழுங்கனித் திரள்கள்
நனிதொறுந் திகழுவ நறைநுக ரளிகள்.
|
14 |
|
|
கொடியன
மலையல திலைபுரி கொடிய
கடியன மலரல திலையுரை கடிய
இடியன முகிலல திலையா சிடியே
குடியன தவமல திலைகெடு குடியே. |
15
|