உரைநிலை
கடந்து நின்ற வுன்னதா திபனே மேலை
குரைகடற் புவிகூட் டுண்ணக் குவித்தபே ரின்பக் கொள்ளை
வரைநிலை தெருண்டு துய்க்கு மாதவ ருணர்வா ரன்றித்
திரையுளா ருணர்ந்திவ் வென்று சாற்றலாந் தகைமைத் தேயோ.
|
32
|
| |
|
நித்திய
சுகபே ரின்ப நிலவளங் கெழுமு ஞான
வித்தக கிரியின் மீது விசும்புற மிளிர்ந்த தூய
சத்திய நெறியை நாடித் தணப்பில்பே ருவகை யோடும்
முத்திநாட் டிறையைப் போற்றி முடுகினார் ஜீவன் முத்தர்.
|
33 |
| |
|
செம்மல்தம்
முரிமை யாவும் ஜீவயாத் திரிக ராய
நும்மவாக் குறித்திங் குய்த்தார் நுகர்ந்துபின் சேறு மீண்டு
வம்மினோ வம்மி னென்னா மங்கலக் கொடிக்கை காட்டி
அம்மலை விளிப்ப தேபோன் றமைந்தன தெரியக் கண்டார்.
|
34 |
| |
|
மோனநாட்
டரசனேவற் பணிவிடை முறையிற் செய்யும்
வானவர் தொகுதி யீண்டி வந்துவந் தேகக் கண்டார்
சேனைகா வலருக் கெல்லாச் சித்தமு மிணங்கிக் கீழ்ப்பட்
டானிக கரும மாற்று மந்தண ரொழுக்கங் கண்டார்.
|
35
|
| |
|
தண்ணளி
கவிந்து வானந் தருமருண் மாரி கண்டார்
புண்ணிய ஜீவ கங்கை பொங்குநீர்ச் சுனையுங் கண்டார்
நண்ணிய திசைக டோறு நன்மையுந் திருவு நட்புங்
கிண்ணிய தருமத் தோடு களிநடம் புரியக் கண்டார்.
|
36
|
| |
|
கொள்ளைவண்
டிமிரின் னோசை கோகிலத் துவனி பூவை
கிள்ளைகள் கிளக்கு மென்றீங் கிளவிபுள் ளொலிமற் றெங்குந்
துள்ளிய மதுர கிதஞ் செவிப்புலந் தொகுப்ப யவும்
வள்ளல்வண் புகழாக் கண்டு கேட்டுள மகிழ்வர் மன்னோ.
|
37 |
| |
|
தீர்த்தனை
யேத்திப் போற்றி ஜெபதபம் புரியுஞ் செவ்வி
ஆர்த்தியிற் குழுமித் தேவா ராதனை புரியுஞ் செவ்வி
கீர்த்தனை கிளக்குஞ் செவ்வி கேட்டதி சயித்துக் கிட்டிப்
பார்த்தருட் செயலை வாழ்த்திப் பரவச ராகி நிற்பார்.
|
38 |
| |
|
வாவிநீ
ராடி வாடா மதுமலர் மாலைசூடி
ஒவிலா னந்த கீத முளங்கனிந் துருகிப் பாடிக்
காவெலாங் களித்து லாவிக் கனிந்தமுந் திரிகை யாதி
ஜீவபோ னகமுண் டுள்ளந் தெருண்டுநூ னெறிசெல் காலை.
|
39 |