பக்கம் எண் :

436

வித்தக ரிருவர் செல்லும் விழுத்தகு மரபை நாடி
அத்தலத் தறவோ ராய வண்டரோர் சிலர்வந் தீண்டி
வைத்தமா நிதிகண் டார்போல் வரன்முறை குழுமி மொய்த்தார்
உத்தம தொழும்ப ரன்றோ வுயிர்த்துணை யுலகுக் கம்மா.

40
 
குழுமிய வாய ருள்ளக் குறிப்பவர் வனச மன்ன
செழுமுக மலர்ச்சி காட்ட தெரிந்துகோ லூன்றி நின்று
விழுமிய குணத் தோனாய வேதியன் விரும்பி நோக்கி
உழுவலன் போடு மற்றீ துசாவுவான் விநய மாக.
41
 
உன்னத பதவி யோமற் றுலகமோ வும்பர் மேய
பொன்னில வுலகந் தானோ வதனொடு புவியைச் சேர்த்து
நன்னிலை நிறுப்பா னுய்த்த நரதேவ விஞ்சை நாடோ
பன்னரு நித்திய செல்வக் களஞ்சியப் பகுதி தானோ.
42
 
யாதெனத் தேறு கில்லே மெம்மனோர் கருத்துக் கெட்டா
மேதகு பொருளுஞ் செல்வப் பெருக்கமும் விமல ஞான
போதகந் தரும்பல் காட்சி பொதும்பரும் பிறவு மெல்லாம்
ஆதரிப் பவரார் யார தநுபவ மறிய கில்லேம்.
43
 
மற்றிது தான்கொல் முத்தி மாநகர் புகுத்து மார்க்கம்
கொற்றவ னகருக் கின்னும் குறிப்பிடு தூரமெம்மட்
டுற்றுமே லிடிற்றுன் பேயோ வுதவியோ நிகழவ தோர்பால்
இற்றைநா ளிரவு தங்கி யேகவீண் டமையுங் கொல்லோ.
44
 
ஆயவித் திறங்க ளெல்லா மறிவுறு மாறெம் பக்கல்
நேயம்வைத் துரைக்க வென்னா நிகழ்த்தலு மாண்டு தொக்க
தூயரி லொருவன் கிட்டித் தொல்லையே யகத்துள் ளன்பு
மேயநண் பினனோ வென்ன விதந்துரை யாடலுற்றான்.
45
 
ஐயன்மீர் காணு மிந்த வானந்த சைல மென்னுந்
தெய்விக கிரியுஞ் சேர்ந்த சிமயமுஞ் செழுந்தண் காவும்
மையறு பொருளுந் தொக்க வளமுமன் னுயிரு மெல்லாம்
வையக முய்யக் கொண்ட மாநுவே லுரிமை தேர்மின்
.
46
 
இத்தகு புண்ணி யக்ஷேத் தித்திரனுக் காக வெம்மான்
மெய்த்திரு மேனி சிந்துங் குருதியின் விலைப்பா லீட்டி
வைத்துமுப் பகையை வென்று வளம்படுத் தமலன் செங்கோல்
உய்த்திள வரசா யென்று முவந்துவீற் றிருக்கின் றாரால்.
47