|
பண்டுதொட்
டின்று காறும் பணிவிடைக் கமைந்து வுண்மைத்
தொண்டரை நிறுவி ராஜ்ய துரைத்தன நடத்தா நிற்பர்
அண்டர்கோ னகரை நாடி யடுக்குநர் வேண்டு மெல்லாம்
உண்டொரு குறையு மில்லை யுத்தர மெமக்கு முண்டால்.
|
48 |
|
|
|
|
மெய்வழி
பிடித்து நின்றீர் விலகினீ ரல்லீர் விண்ணாட்
டுய்வழி யிதுவே யாகு மும்மையித் தலமீ றாகப்
பொய்வழிப் படாது காத்த புண்ணிய மூர்த்தி யார்செங்
கைவழி காட்டி யின்னுங் கடைவரை காக்கு மன்றோ.
|
49 |
|
|
|
|
கொற்றவ
னகர்க்கிம் மேலே குறிப்பிடு தூரங் கூறில்
பற்றுளார் தமக்குத் தூரம் பற்றிலார்க் கண்மை யென்றும்
உற்றுணர்ந் தூன்றி நோக்கி யூக்குவார்க் கிடரொன் றின்றாஞ்
சற்றுநூ னெறிவிட் டேகிற் சார்ந்திடு மோச நாசம்.
|
50 |
|
|
|
|
சாதுமார்க்
கத்தீர் நும்மைத் தலைப்பெய்த வைகல் வான
தூதரை யெதிர்ந்தா லன்ன சுபதின மாகக் கொண்டேம்
பேதமின் றெம்மி னும்மில் பிறங்குமித் தலத்தி லுள்ள
கோதறு நிதிகள் நம்மான் குருசுயர்த் தவர்க்கே யன்றோ.
|
51 |
|
|
|
|
வழிநடந்
திளைத்தீர் சின்னாள் வதிந்திளைப் பாறித் தேறி
விழிநலந் திகழு மிந்த வியன்கிரி மிசைதொக் குள்ள
கழிபெரும் புதுமை யாய காட்சிகண் டறவீர் பின்னர்
எழிறிகழ் முத்தி மார்க்கத் தெய்துமென் றேம்ப லோடு.
|
52 |
|
|
|
|
செங்கரங்
கொளுவி நண்பீர் சேறுது நம்மில் வம்மின்
இங்கினி நிற்றல் வேண்டா வென்றக மலர்ந்து கூறிப்
பொங்குபே ரன்பினாலே புதுவிருந் தினரைக் கூட்டி
மங்கல கீத மல்க மனைபுகூஉ வரிசை செய்தார்.
|
53 |
|
|
|
|
பல்வகை
யொருபற் றில்லாப் பரதேசி களைக்கொண் டாடி
நல்வரை யாயர் காட்டு நண்பெவா றாய தென்னிற்
செல்வழி யிகந்த தீய செறுநருக் காக ஜீவன்
நல்கிய வன்பின் வாரி படிந்தமெய்ந் நலத்த தாமால்.
|
54 |
|
|
|
|
ஆயரோ
டளவ ளாவி யாரிய ரிருவர் தாமும்
நாயகன் கருணை யுள்ளி நயந்தினி திருந்த காலை
மாயமார் பிரபஞ் சத்தை வரைந்து நூல் வழிப்பட் டுய்ந்த
தூய யாத்திரிகங் கேட்க விருப்புளேஞ் சொல்க வென்றார்.
|
55 |