|
நன்றென
வெழுந்து நின்று நலங்கிளர் மறையோன் தொக்கார்க்
கொன்றுமஞ் சலிசெய் தெம்மை யுவப்பொடு மினிதி னேற்றுக்
கன்றுகாண் கறவை போலக் கசிந்துபா ராட்டு மன்பை
யென்றுமுள் ளுதுங்கைம் மாறொன் றீட்டுதற் கருக ரல்லேம்.
|
56 |
|
|
|
|
தேனந்து
நறுந்தண் சோலை செறிதடங் காவு சூழ்ந்த
ஆனந்த சைல மீதென் றநுபவத் துணர்வு பெற்றேம்
ஞானந்தம் மேனி யாய நம்பிரான் றொழும்பர் நீவிர்
தானந்த வுணர்ச்சி யெம்முட் டந்தனிர் சான்றெம் முள்ளம்.
|
57 |
|
|
|
|
செல்வழிக்
கண்ணோர் நாளிற் காணினுஞ் செவ்வி யோர்தாந்
தொல்வழிக் கேண்மை யுள்ளந் தோன்றயாத் திடுவ ரென்ப
தொல்வதே யெனநுஞ் செய்கை யுண்மைவற் புறுத்திற் றின்னே
நல்வழி தெருட்டு நல்லீர் நஞ்செயல் கேண்மி னென்னா.
|
58 |
|
|
|
|
விளம்பரத்
தொனிகேட் டொல்லை வெருண்டதுங் குரவன்
வாய்மை
உளங்கொளத் தெருட்டி யுய்த்த வுண்மையுந் தவறி நேர்ந்த
பழங்கணு மோச நாசப் பரிபவச் சிறையு மெல்லாம்
வளம்படப் புகன்று காத்த கிருபையின் மாண்புஞ் செப்பி.
|
59 |
|
|
|
|
கும்பிக்கே
யிரையை நாடுங கொடியமா யாபு ரிக்கண்
நம்பிக்கை தெருண்டு வந்து நல்வழி பிடித்த வாறுங்
கம்பிக்க வுடலு நெஞ்சுங் கரைந்திடக் கரைந்தீ றாக
தும்பிக்கை கொண்டே மென்றா னோன்புரு வாய தக்கோன்.
|
60 |
|
|
|
|
பனவன்வாய்
மொழந்த செஞ்சொற் பாகினைப் பருகி யாயர்
அனைவரு மவச ராகி யனல்மெழு காக வுள்ளங்
கனிவுறீஇ யுருகிற் றென்னக் கண்ணினீர் கவிழ நின்று
முனைவனை யுள்ளி யுள்ளி முறைமுறை துதித்தார் பல்கால்.
|
61 |
|
|
|
|
ஈங்கிவை
நிகழ்ந்த பின்ன ரிருவர்க்கு மிரவு தங்கப்
பாங்குறும் பள்ளி நல்கி யவரவர் பக்க லேக
ஓங்கிய வுவகை யோடு மொண்டவர் கிறிஸ் தியேசு
பூங்கழ றொழுது வாழ்த்திக் கண்டுயில் பொருந்தி னாரால்.
|
62 |
|
|
|
|
குறியுடை
யிரவு நீங்கக் குணதிசை சுடர்வந் தூன்ற
முறையறி ஜீவன் முத்தர் முயங்கிய துயிலை வீசி
நிறைமொழி தெருண்டு செய்யு நித்திய கரும முற்றித்
துறைதொறுந் தொழுது போற்று மந்திரத் துழனி கேட்டார்.
|
63 |