ஆயிடை
யறிஞன் மெய்ய னநுபவ ஞானி யன்பன்
தூயனுச் சாகன் றீரன் சுகிர்தனென் றிவர்வந் தீண்டி
ஏயவந் தனஞ்செய் தேற்றங் கிருவரை யழைத்தா னந்த
மீயுயர் சைலத் தும்பர் வளனெலாம் விதந்து போங்கால்.
|
64
|
|
|
மெய்ப்பரி
சுணர்வீ ரிந்த வெறுங்குவட் டினுக்கு நாமந்
தப்பறை யென்ப ரேறிச் சிலரிடை தவறி யப்பாற்
குப்புறீஇ விழுந்து மாண்டார் குறிக்கொண்டு காண்மி னென்னாச்
செப்பின் ருற்றுநோக்கித் திரும்பிவெய் துயிர்த்தார் செய்யோர்.
|
65 |
|
|
ஆண்டொரு
சாவ தான மெனுஞ்சிம யத்தை யண்மித்
தூண்டிநீர் சேய்மைத் தாகத் துணைவிழி யிழந்து சில்லோர்
மாண்டவர் தலத்து லாவி மறிந்துவீழ்ந் தயருந் தன்மை
காண்டிரோ வெனவாழிழிழிழி மேன்ன வவர்நிலை கழற லுற்றார்.
|
66 |
|
|
நன்னெறி
கடைப்பி டித்த நண்புளீர் நீவிர் வந்த
செந்நெறிக் கிடப்பா லாகச் சேருமோர் கடவைப் பாதை
அந்நெறி தழுவி யின்னோ ரசுரனாம் விடாத கண்டத்
துன்னெறிப் பசாச னுய்த்த சிறையிடைத் துடித்தார் பன்னாள்.
|
67 |
|
|
எண்ணருஞ்
சிறைப்பட் டோரை யிரக்கமில் லாவன் னெஞ்சக்
கண்ணறைப் பாவி யந்தோ கண்ணிணை பிடுங்கி யிந்த
வண்ணமா மரித்தோர் சேரு மயானவெஞ் சிறையி னுய்த்தான்
புண்ணி நெறிகை விட்ட புலையர்தங் கதியீ தன்றோ.
|
68 |
|
|
என்றெடுத்
தியம்பு மேல்வை யேதமி லிருவர் தம்மில்
ஒன்றிய சிந்தை யாக வொருவரை யொருவர் பார்த்து
நின்றுளங் கலங்கி மாழ்கி நெட்டுயிர்ப் பெறிந்தவ் வாயர்
சென்றுழிச் சென்றா ரங்கோர் செழுமலர்க் காவின் பாங்கர்.
|
69 |
|
|
அந்தணர்
காணு மாறவ் வானந்த சைல வாணர்
பந்தித்த கதவ நீக்கி யுள்ளுறப் பார்மி னென்ன
விந்தையீ தென்னோ வென்று வேதியர் விரும்பிக் கிட்டி
முந்துறு படுகர் வாயின் முற்றியுண் ணோக்குங் காலை.
|
70 |
|
|
கொந்திருள்
குழுமித் துற்றுங் கொழும்புகைப் படலங் கண்டார்
கந்தக நாற்றங் கொண்டார் கதழ்ந்தெரி கதுவிப் பொங்குஞ்
செந்தழற் கடலி னோசை செவிமடுத் திடுவ தோர்ந்தார்
அந்தரத் துருமு வீழ்ந்த தாமென வச்ச முற்றார்.
|
71 |