எழுகொழுந்
தழலில் வீழ்ந்து மிறுதிகாண் கிலரா யேங்கிக்
கழிபெருங் கூச்ச லிட்டுக் கதறியு மாக்கை தீக்குள்
முழுகியு மாவி நைந்து முறையிட்டு மாற்ற மாட்டா
தழுகுர லோசை மல்கி யலறுபே ரொலியுங் கேட்டார்.
|
72 |
|
|
அவ்வயி
னின்று நீங்கி யாரிய ரறவோ ராய
செவ்வியீர் யாங்கள் கண்ட திறம்வகுத் துரைமி னென்னாக்
கைவரு வஞ்ச நெஞ்சுக் கள்ளஞா னியர்வி ரைந்து
வெவ்வழ னிரைய மெய்த விதித்ததிக் குறுக்குப் பாதை.
|
73 |
|
|
பன்னெடு
நாளா ஜீவ பாதையைப் பிடித்து வந்துந்
துன்னிய நாச மோசஞ் சோதனை யிடுக்கண் டுய்த்தும்
இந்நெடு வரைட் டாக வெட்டியு மிகலுக் கொல்கிப்
பின்னிடை பவரே யிந்தப் பிலந்தலைப் படுவர் மாதோ.
|
74 |
|
|
இப்பிலத்
துவாரத் தன்றே முதற்பிறப் பிகழ்ந்த வேழை
விப்பிர யஜமான் றன்னை விற்றசா மித்து ரோகி
துப்புறழ் சுவிசே ஷத்தைத் தூஷணஞ் செய்த பாவி
கைப்பொருள் வெஃகிப் பொய்த்த காதகர் கவிழ்ந்தார் முன்னம்.
|
75 |
|
|
கனைகுரற்
பிலத்து வாரங் கள்ளஞா னியர தென்னா
இனையன விளம்பக் கேட்ட மறைவலா னிதுமுன் கேட்டேந்
துனையிருட் பிழம்பு காட்டிச் சொற்றநும் முரைகொண் டின்னே
தினையள வைய மின்றித் தெளிந்த மென்று செப்பும்.
|
76 |
|
|
நெறியலா
நெறியிற் செல்லு நீர்மையு மடமை யன்றாம்
அறிவன வறிய கில்லா வனந்தரு மடமை யன்றாம்
பிறிதெவன் கற்றுங் கேட்டும் பேறறி வுடைய ராகிப்
பொறிவழி யுள்ளம் போக்கும் புன்மையே மடமை யாமால்.
|
77 |
|
|
மானிட
வாக்கை பெற்றும் மறைநெறி புக்கும் நேர்ந்த
ஈனதை நிந்தை துன்ப மினையன சகித்துந் தேவ
கோனருள் பெற்றா னந்தக் குவடுகண் டடைந்து மந்தோ
மேனிலை வழுவி வீழின் மீட்புண்டோ பாவம் பாவம்.
|
78 |
|
|
போக்குண்டு
துன்புக் கெல்லாம் புகலுண்டு விபத்துக் கெம்மான்
வாக்குண்டு நமக்குக் கூட வருந்துணை யுண்டு கெஞ்ச
நாக்குண்டு வீடு கூடு நம்பிக்கை யுண்டு நல்லீர்
மீக்கொண்டு நுங்க ளாசி விடைகொண்டு சேறு மென்றார்.
|
79 |