பக்கம் எண் :

44

   

மானத வாவியிற் படிந்து மாட்சிசால்
ஆனிக கருமங்க ளாற்றி யாண்டகை
தூநறு மலர்ச்சரண் டொழுது தைவிக
போனக நுகருவர் புலவர் தாங்குழீஇ. 51

     (பொ - ரை) தேவதூதர்கள் மானசம் என்னும் குளத்தில் படிந்து,
மாட்சிமை நிறைந்த நித்திய கருமங்களை இயற்றி, வல்லமைபொருந்திய
பெருமானது தூய்மையும் வாசனையுமுடைய மலர்போலுமழகிய
திருவடிகளைத் தொழுது, தெய்வீகமான ஞானபோஜன
பதார்த்தங்களைக் கூடிப் புசிப்பர்.

 
   

ஆண்டகை யருள்வழி யாவி யின்கணம்
வேண்டுரு வெடுப்பர்செய் வினைவ சத்தராய்க்
காண்டகு முலகிடைக் கரந்து வைகுவர்
சேண்டலத் தியங்குவர் செவ்விக் கேற்பவவே. 52

     (பொ - ரை) வீரத்தன்மை பொருந்திய பெருமான்
கட்டளையிட்டருளிய வண்ணம் ஆவியின் கூட்டங்கள் அவ்வப்போது
வேண்டிய உருவங்களை எடுப்பர். தாம் செய்யவேண்டிய கடமையின்
வசப்பட்டு காணத் தகுந்த இவ்வுலகத்தில் மறைந்து தங்குவார்.
சமயத்துக்கேற்றபடி விண்ணுலகத்தில் இயங்குவார்.

 
   

அணிகிளர் திருநகர்க் கரச் னாணையிற்
பணிமுறை புரிகுவர் பணிசெய் யாவிகள்
தணிவில்பே ருவகையைச் சாற்று மங்கவர்
திணிசுட ரிரவியிற் றிகழும் வாண்முகம். 53

     (பொ - ரை) அழகு பிரகாசிக்கின்ற திருநகரத்திற்கு அரசனாகிய
சர்வேஸ்வரனுடைய ஆஞ்ஞைப்படி திருப்பணிவிட செய்கின்ற ஆவிகள்
தத்தம் பணிகளை முறைப்படி செய்வார். குறைவில்லாத பெரிய
மகிழ்ச்சியைக் கூறுகின்ற அவர்களுடைய பிரகாசம்பொருந்திய முகங்கள்
அங்கே நெருங்கிய சுடர்களையுடைய சூரியனைப்போலப் பிரகாசிக்கும்.

 
   

மும்முர சொலியருண் மழைமு ழக்கொலி
மம்மரில் வான்கணம் வழுத்து பேரொலி
செம்மல்சீர் புனைந்துரை திவவி யாழொலி
கைம்மிகுத் திசைபடுங் ககன மெங்கணும். 54

     (பொ - ரை) கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்னும்
மூன்று முரசுகளின் சத்தமும், அருள்மழையானது முழங்கிப் பெய்கின்ற
சப்தமும், மயக்கமற்ற வானதூதர் கணங்கள் வாழ்த்துகின்ற பெரிய
சப்தமும்,