பெருமானுடைய சிறப்பைக்
கவிகளில் புனைந்து உரைக்கின்ற சப்தமும்,
முறுக்காணிகளையுடைய யாழ் வாத்தியத்தின் சப்தமும்
வானலோகமெங்கும் மிகுந்து சப்திக்கும்.
|
நன்மைசால் திருநகர் நந்த னத்தலர்
தன்மமுங் கருணையுந் தயையன் பரதிசற்
கன்மமு நறுங்கடி கமழ்ந்து லப்புறாப்
பொன்மலர்க் குவைகளாப் பொதுளு மெங்கணும். 55
|
(பொ
- ரை) நன்மைநிறைந்த திருநகரத்திலுள்ள நந்தவனத்தில்
புஷ்பிக்கின்ற தருமமும் கருணையும் தயை அன்பு முதலிய
சற்கருமங்களும் இனிய வாசனை கமழ்ந்து கெடுதலில்லாத
பொன்மலர்க்குவியல்களாய் எவ்விடத்தும் நெருங்கியிருக்கும்.
|
சிறையுடைத் தூர்தஞ் சேனை யின்குழாம்
முறைமுறை யகிலத்து முடுகி முத்திநாட்
டிறைதிரு வுளக்குறிப் பினிதி னுய்த்தது
குறைவற முடித்துமீண் டடுப்பர் கோனகர். 56
|
(பொ
- ரை) சிறகுகளையுடைய தூதர் சேனையின் கூட்டமானது
முறைமுறையாக பூவுலகத்திற்கு விரைந்துசென்று முத்திநாட்டிறைவனது
திருவுளக்குறிப்பை ஆங்கு கற்பித்து அதைக் குறைவில்லாமல் முடித்து
திரும்பவும் முக்திநகரையடையவர்.
|
தேவவுத் தரங்கொடு திகந்தத் தேகுவர்
மூவுல கங்களு மிமைப்பின் முந்துவர்
தாவிவிண் படர்குவர் சமுகத் தெய்துவர்
வேவறி சதுரராம் விபுத வொற்றரே. 57
|
(பொ
- ரை) வேவு அறிதலிற் சாமர்த்தியரான தேவதூதர்கள்
ஈஸ்வரனுடைய ஆஞ்ஞைகளைக்கொண்டு அஷ்டதிக்குகளின்
எல்லைவரைக்கும் செல்வர். மூன்றுலகங்களையும் ஒரு கண்ணிமைப்
பொழுதினுள்ளே கடந்து செல்லுவர். ஆகாய மார்க்கமாகப் பறந்துசென்று
மீட்டும் ஈஸ்வரனுடைய திருமுன்னிலையை அடைவர்.
|
கல்லிமூ வுலகையுங் கழங்கென் றாட்டவும்
ஒல்லைவான் சுடர்களை யூதி யோட்டவும்
வல்லவான் சேனைகள் வரம்பில் கோடிகள்
தொல்லையங் ககனமா ளிகைதொக் குள்ளன. 58
|
(பொ
- ரை) மூன்றுலகங்களையும் கையாற்கிள்ளியெடுத்துப்
பந்தைப் போல் ஆட்டவும், வான ஜோதிகளை அதிசீக்கிரத்தில் ஊதி
ஒட்டவும் வல்ல அளவில்லாத கோடிக்கணக்கான தேவசேனைகளுக்குரிய
பழைமையாகிய வானலோக மாளிகைகள் தொகுதி தொகுதியாயுள்ளன.
|