என்றுதம்
மகத்தெ ழுந்த வுணர்ச்சியை யினிது கூறி
இன்றுநீர் செய்த நன்றிக் கெல்லையு மீறு மின்றால்
வென்றியங் கிரியீ ரேக விடையினித் தருக வென்றார்
நன்றென வொருவன் றீட்டு நல்வழிப் படமொன் றீந்தான்.
|
88 |
|
|
இச்சக
மொழயை நம்பா திருமென வற்பு றுத்தி
எச்சரித் துரைத்தும் முன்னே யெதிர்ப்படுஞ் சோக பூமி
அச்சுறக் கத்தை நல்கு நனவொடு கடத்தி ரென்றும்
அச்சுதன் றுணையை நாடி யருணெறி பிடித்தி ரென்றும்.
|
89 |
|
|
ஏனைய
பிறவுந் தத்த மநுபவத் தியைந்த கூறி
அனன மலர்ந்தன் போடு மாசியு மியம்பி வேண்டும்
போனக பான நல்கிப் பொருந்துநல் விடையு மீந்தார்
ஞானவா னந்த வோங்கள் நாடிய வண்டர் மாதோ.
|
90 |
|
|
ஆசியும்
விடையும் பெற்றா ரஞ்சலி செய்தார் பல்கான்
மாசறு மனத்தார் செய்த வுதவியும் வருவ காட்டிப்
பேசிய மொழியு நெஞ்சிற் பிறங்கிடத் தீட்டி வைத்தார்
சனை வழுத்தி யேத்தி யேகினார் வழியைக் கூடி.
|
91 |
|
|
வேறு. |
|
|
|
வானுற்
றிழிந்து நிலனுற்ற மரபா மென்ன மலர்க்காவின்
தேனுற் றருவி குதிபாயஞ் சிகரித் தலைநின் றிழிந்துகலை
நானுற் றுலவி விளையாடும் வயவெஞ் சீய வரைச்சாரல்
நானுற் றுலவி யுரையாடிக் கனிவுற் றறவோர் கடுகினார்.
|
92 |
|
|
பொழிதண்
டேறன் மகரந்தப் பொடிநாண் மலரின் விரையளவிப்
பழகிப் பழகிப் பனிதுதூவித் தெண்ணீர்ச் சுனையிற்
படிந்துவருங்
குழவித் தென்ற லுடலளைந்து குலவச் சிறைவண் டிசைகிள்ளை
மழலைக்கிளவி செவிமடுப்ப மகிழ்ந்து விரைந்து வழிச்செல்வார்.
|
93 |
|
|
மயலைத்
தவிர்க்குந் திருவசனம் வளர்தீ வினையாங்
கொந்தளித்த
புயலைத் தவிர்க்குங் குமரேசன் மேனா ளீட்டும்
புண்ணியம்போல்
வெயிலைத் தவிர்க்குந் தண்டலையை விரித்தாங் காங்கு
கடும்பசியின்
இயலைத் தவிர்க்கு நறுங்களிகா யின்றே னுதவி யெதிர்சாரல்.
|
94 |
|
|
திருந்து
கிரியின் புறமணைந்து திகழுந் தடங்கா யாத்திரைசெய்
விருந்தீர் வம்மி னெனக்கூவி விளித்துக் களித்து முகமலர்ந்தீ
தருந்தும் பருகு மிளைப்பாறி யகலு மெனக்கை யளிக்குமால்
வருந்தி னோருக் காதரஞ்செய் மாட்சி சானன் மனையேபோல்.
|
95 |