|
பொன்னாட்
டரசனுரிமையெலாம் புனிதத் தொண்டர்
பொருட்டுள்ள
தென்னாச் சுருதி முறையிடுவ தீண்டே யறிந்தாம் யாத்திரிகர்
உன்னா முன்ன முள்ளவெலாங் கரவின் றுதவி யுபசரிக்குந்
தன்னா லென்னி லிதுவன்றோ சரத முலகு நிலைபெறற்கே.
|
96 |
|
|
|
|
வேறு |
|
|
|
|
|
மாக
மீது லாவு மேக சால மூடு மாதவி
நாக மாதி தாரு நீழ லார்ந ரந்த நாறுபூஞ்
சாக மாரி றால்கி ழிந்தொ ழுக்கு நீர்த்த டங்குலாம்
போக பூமி போலு நீடு பொங்க ரூடு போயினார். |
97 |
|
|
|
|
துங்க
வாவி நீர்ப டிந்து சுத்த வத்தி ரந்தரித்
தெங்கு மாய வீச னைத்து தித்தி றைஞ்சி யேத்தியே
பொங்கு ஜீவ போன கம்பு சித்தெ ழுந்து தோத்திர
மங்க லம்பி னைந்து பரிநாடு வார்வ ழிக்கொடே.
|
98 |
|
|
|
|
இரவு
கான கத்தொர் பக்க லிலைவி ரித்து றங்குவார்
விரவி ராவி டிந்தி டாத முன்னெ ழுந்து விமலனைப்
பரவி நின்று ஜீவ பாதை பற்றி நாடி யேகுவார்
குரவர் நல்கு நெறிவ ரைந்த குறிய றிந்து கொள்வரால்.
|
99
|
|
|
|
|
தங்கு
வானு டுக்க ணந்த யங்கி யன்ன பொன்மலைப்
பொங்கர் பன்ம லர்க்கு லம்பொ லிந்தி லங்கு சூழல்முற்
றெங்கு மோரி டுக்க ணின்றி யேம்ப லோடவ் வேதியர்
திங்க ளோரி ரண்டு மூன்று செல்ல வங்கு செல்லுநாள்.
|
100 |
|
|
|
|
ஆனந்த
சைலப் படலம் முற்றிற்று. |
|
|
|
|
|
|
|
|
|
|
|
எல்லை
நூனெறிக் கயலிற்பின் வாங்கியென் றிசைக்கும்
புல்லிய ன்றனைப் பிணித்தெழு பேயதொகூஉப் புடைத்தீர்த்
தல்லி யற்படு பாதலக் கிடங்கரூ டமிழ்த்தச்
செல்லு மாறுகண் டஞ்சியுண் ணடுங்கினார் செய்யோர்.
|
1 |
|
|
|
|
ஆய
காலைமெய் யாரண னாருயிர்த் துணைவ
பேயி னாற்பிடி பட்டவிப் பதிதனூர் பேசில்
மாய பாதித்தி யாபுரி நாமம்பின் வாங்கி
தூய நாட்டமற் றாலிருண் மூடிடுந் துணிபே.
|
2
|