|
தூய
வாயுதம் பெற்றிலன் றோட்பல மில்லன்
நாய கன்றுணை யிழந்தன னாடுவ தினியென்
பேயர் கையகப் பட்டனன் பேதுறீஇ யந்தோ
ஆய சம்பவ மொன்றுள தையவென் றறைவான்.
|
3 |
|
|
|
|
இத்த
ரத்துநிட் கபடமென் றிசைபெறு நகரம்
அத்த ரத்தருட் டனதனா மற்பவிஸ் வாசி
வித்த கக்கலை யரதந நாணய மிளிர்பூண்
பூத்தி ரத்தொடு முத்திமார்க் கத்திடைப் படர்ந்தான்.
|
4 |
|
|
|
|
அந்தி
பட்டிர வாகவங் கடுத்தவூ ரருகில்
வந்தி ருந்திளைப் பாறின னாங்கது மரண
சந்தி யென்றறிந் தானிலன் றுயின்றனன் சாமம்
முந்தி னார்கள்வர் பாதகன் முதலிய மூவர்.
|
5 |
|
|
|
|
வெய்ய
பாதகர் வரவறிந் திருந்துயில் வீசிப்
பொய்யில் கேள்வியான் பொருக்கென வெழுந்துபோய்ப்
புலையர் கைய கன்றுய முடுகின னாயினுங் கடுகி
நொய்து பற்றினர் புடைத்தனர் பொருட்பறி நுதலி.
|
6
|
|
|
|
|
தீர்க்க
மில்லனா யினும்பிடி விடுத்திலன் சினந்து
மூர்க்கர் கைத்தடி யாற்றலை மோதலு மயங்கிப்
பார்க்கண் வீழ்ந்தனன் கைப்பொருள் கவர்ந்தனர் பதறி
ஊர்க்கு ளோடினர் வேற்றொலி கேட்டலு முடைந்தே.
|
7 |
|
|
|
|
நாண
யம்பறி போயது நல்லணி யெதையுங்
காணு கிற்றிலர் கள்வரென் றறிந்துபின் றன்னைப்
பேணி வைத்ததை யிழந்தமை நினைந்துபே துற்றுஞ்
சேணு றுங்கதி வழிபிடித் தேகினன் றெருண்டு.
|
8 |
|
|
|
|
நாண
யங்கெடின் யாவர்க்கு முலகத்து நடப்புக்
கோணு மன்றியோர் குணமுறா தென்னுமிக் குறிப்பைக்
காணு கையதன் கைப்பொரு ளிழத்தலிற் கடுகி
நாணு ழந்தைய மேற்றுண்டு நாள்பல கழித்தான்.
|
9 |
|
|
|
|
அணிக
லம்பல விருக்கவு மையமேற் றுண்ணத்
துணிவ தென்னெனச் சொற்றியேன் மற்றவன் றொகுத்த
மணிய ணிக்குல கங்கொலோ விலைவரம் பறியுங்
குணிமற் றெங்ஙனங் கொடுப்பதவ் வணிபிறர் கொள்ள.
|
10 |