பக்கம் எண் :

446

  தந்தை யாகிய தற்பரற் கொருசுத னருளால்
மந்தி ராற்புத மாக்கன்னி மரிவயிற் றுதித்தோன்
இந்த மாநிலத் திரக்ஷணை புதுக்கிய வீசன்
பொந்தி யுப்பிலாத் துழையரும் பாடுகள் பொறுத்தோன்.

19
   
  மாசி லாவுயிர்ப் பலிசிலு வையிலுவந் தீந்தோன்
பூச மாதயுற் றுயிர்த்தெழுந் துன்னதம் புக்கோன்
ஈச னோர்வலப் பாகத்தி லினிதுவீற் றிருப்போன்
ஏசு வாங்கிறிஸ் திரக்ஷக னென்விசு வாசம்.
20
   
  மூன்றொன் றாகிய முழுமுதற் பொருளிலே முளைத்துத்
தோன்றி ஜீவரைத் தூய்மையாய்ப் பக்குவப் படுத்தும்
ஆன்ற பேரரு ளாவியி னநுக்கிர கத்தை
ஊன்றி யேகுவல் ஜீவனுக் கென்மனத் துண்மை.
21
   
  தூய வோர்பொதுத் திருச்சபை தூயரி னைக்கியம்
ஆய பாவமன் னிப்புமீட் டாக்கைபெற் றெழுதல்
ஏயு நித்திய ஜீவனென் றிவையுள வென்றே
மாய மின்றியென் மனக்கொளக் கிடந்தவிஸ் வாசம்.
22
   
  என்று ளங்குவிந் தெவனிவண் பகிர்முகத் திசைய
நன்ற றிக்கையிட் டிறுவரை நன்னெறி பிடித்தே
நின்றி டிற்பர கதியுகூஉ நித்திய ஜீவன்
ஒன்றி வாழ்குவ னுன்னதத் தூழியோ டூழி.
23
   
  இத்த கைப்படு மெய்ச்சுரு தித்தொட ரிதுவே
சுத்த சத்திய மெய்விசு வாசத்தின் றொகுதி
உத்த மந்திகழ் ஜீவனுக் குறுதுணை யுலவா
முத்தி வாயிலுட் புகுத்திடு முத்திரை லிகிதம்.
24
   
  மரண பாசத்தை மதுமண மாலிகை யாக்குந்
திரண மாக்கிடு மலகையை யுலகத்தைத் திரித்துட்
கரண சுத்தசற் கருமத்திற் கருத்தினைத் திருத்தும்
புரண புண்ணியற் கன்புசெய் புனிதவிஸ் வாசம்.
25
   
  களங்க மற்றவிச் சிரத்தைநீர்க் கயங்கட மதிபோல்
உளங்கொ ளீஇச்சில ருழையுரங் கொண்டுநின் றோங்கி
விளங்கு மோர்சில ருள்ளத்து மறைபடூஉ மெலிந்து
துளங்கி நிற்குமா லிறுவரை யுயர்கதி துருவி.
26