பக்கம் எண் :

447

  ஒரும கப்பலி யூட்டிய வுரிமையு மரசின்
திருவை நீத்தினந் தழுவிய தீரமுஞ் சினத்தீப்
பொரும ழற்படு சூளையை முடங்குளைப் புழையை
வெருவு றாதெதிர் தருக்கிய வொள்ளிய விறலும்.
27
     
  உலகை யிள்ளுவர்த் தோட்டிய வுத்தம நிலையும்
அலகை யைப்புறங் கண்டுள ராற்றலின் மாண்பும்
கலக மிட்டுயிர் கவிழ்த்தபோழ் தத்துமுட் கலங்கா
திலகு மெய்வயி ராக்கியத் தியற்கையு மினவும்.
28
   
  தேரி னெம்பிமற் றிவ்வெலாந் தீர்க்கவிஸ் வாசத்
தாருஞ் செய்கையென் றறியினி யற்பவிஸ் வாசச்
சீரு மீண்டெடுத் தியம்புவல் சிறியவோ ரிடுக்கண்
சாரு மாயினுந் தளர்ந்திடுங் குலைந்துளஞ் சாம்பி.
29
   
  பண்டு மாநிலக் கிழமையைப் பத்தியிற் படைத்தும்
மண்டு சோதனைக் கிடைந்துபின் வழுக்கிவீழ் மரபும்
ஒண்டொ டிக்கெதி ரூன்றிடா துண்மையைப் புரட்டி
அண்டர் நாதனை மறுத்தபே ரவலத்தி னமைவும்.
30
   
  நீரி மான்றின மெழுமுறை விழுந்தெழு நீர்மை
பேதி யாதருண் மொழிமொழி பெற்றியும் பிறவும்
சாது மார்க்கஞ்செ லற்பவிஸ் வாசத்தின் சமைவாம்
ஈது நிற்கவே சாநிலை தெருளென விசைப்பான்.
31
   
                 வேறு.
   
  மாசி லாவிசு வாசத்தின் மாண்பெலாம்
பேசக் கேட்டனை சொற்றவிப் பெற்றியோர்
ஈசத் தேனுமுண் டென்னவெ சாவிசு
வாசச் செய்கைவ குத்ததுண் டோமறை.
32
   
  சேட்ட பாகசு தந்தரச் செவ்விவிற்
றூட்டி னான்பசிக் கொல்கியின் னோர்துயர்
வாட்டுங் காலைத்தம் மாத்தும வாழ்வைவிற்
றீட்டு வார்புலை யின்பத்தைக் கூளிபால்.
33
   
  ஈச னீந்தவு ரிமையை யெட்டுணை
ஆசை யின்றிவ ரைந்தன னாதலில்
ஏச னுக்கிறை வன்வயி றேயலால்
பேசு தெய்வம்பி றிதுள தோசொலாய்.
34