|
தும்பி
மீனசு ணம்பதங் கஞ்சுரும்
பைம்பு லம்புசித் தாருயிர் மாய்தல்போல்
வெம்பி மாந்தரு மைம்பொறி வேட்கையுற்
நிம்ப ரேபுதை வார்கதி யெண்ணிலார்.
|
35 |
|
|
|
|
சவியு
லாம்பர லோகசம் பத்தகங்
குவிய நல்குர வாகுவர் கோதிலார்
புவிசு லாயழி போகம்பு சித்தலே
அவிசு வாசிக ளாக்கமென் றூக்குவார்.
|
36 |
|
|
|
|
இன்ன
ருக்குள்ளொ ருவனி ஸரவேன்
முன்ன வன்னென முன்னின்று காட்டுமால்
அன்ன வன்செய லற்பவிஸ் வாசியிற்
றுன்னு றுங்குண தோடத்தைத் தூக்குவாம்.
|
37 |
|
|
|
|
கையு
றும்பொருள் கட்டொடு நீங்கியும்
மெய்யு றும்பல வேதனைக் கொல்கியும்
ஐய மேற்றுண்ட வமதிப் பெய்தியும்
உய்யு நூல்வழி நீத்தடி யுய்த்திடான்.
|
38 |
|
|
|
|
அரிய
ஞாணவ ணிமணிப் பூஷணந்
தெரியி னித்திய ஜீவித நாட்டினுக்
குரிய வாமென வொன்றும்வி டுத்திலன்
பெரிது காத்தவை பேணின னென்பவே.
|
39 |
|
|
|
|
பீடு
சாலும்பி றங்கணிப் பேழையை
ஈடு காட்டியி ழிசுகங் கொள்ளுதல்
நீடு பேரின்ப நித்திய வாழ்வொரீஇக்
கேடு நாடுங்கெ டுமதி காண்டியால்.
|
40
|
|
|
|
|
பாவ
தோடத்துக் கஞ்சிப்ப தறியுந்
தேவ தொன்டுக்குச் சிந்தைதி ருந்தியும்
ஆவன் மேலிட்ட ருட்பிர சாதமே
ஜீவ னுக்கமு தாயுண்டு தேக்கியும்.
|
41 |
|
|
|
|
எழுத
லேகுத லெய்த்தலி டறுதல்
விழுத லுள்ளுதல் விம்முதல் வெம்புதல்
அழுத லேங்குத லஞ்சுதல் செஞ்சுதல்
தொழுத லாற்றிமெய்ச் சொன்னெறி பற்றியும்.
|
42
|