|
வானெ
றிக்கண்ம யங்கியுந் தன்பல
வீன மிக்குவ ழுக்கியி ழுக்கியும்
மான தத்தழு தேங்கிம லங்கியுந்
தீன ரக்ஷகன் சீர்கண்டு தேறியும்.
|
43 |
|
|
|
|
தம்பி
ரான்றிருப் பாதச ரோருகம்
நம்பி முன்னுற நாடின னன்றிமற்
றிம்ப ருற்றவி டுக்கணுக் கீடழிந்
தம்பு விப்படு கொப்பத்தி லாழ்ந்திலன்.
|
44 |
|
|
|
|
வாய
சங்கள்பி ணந்தினும் வண்டினந்
தூய நாண்மலர்த் தேத்துளி துய்த்திடும்
மாய வின்பநு கர்வர்ம தியிலார்
மேய பேரின்ப நாடுவர் வித்தகர். |
45 |
|
|
|
|
நேரு
மாளர வம்மென நீத்தகல்
சோர ரைப்புறங் கண்டுது ரந்திட
வீர மில்லனிவ் வேதவிஸ் வாசியென்
றோரு கின்றனை யோதுவல் கேட்டியால்.
|
46 |
|
|
|
|
ஆண்ட
கையனி கத்தரு ளப்பன்வந்
தீண்டு பேரொலி யென்றுமுக் கள்வரும்
மீண்ட தன்றிவி றலின்மை யாலெனக்
காண்டல் செய்கிலர் கைகலந் தேற்றவர்.
|
47 |
|
|
|
|
பெரிதன்
றாலுரம் பேசுதல் பேசல்போற்
புரித லேபெரி தாமிப்பு லையரை
இரித ரச்சம ராடுவை யேகொனீ
தெரித ருஞ்செரு நேரினச் செவ்விவாய்.
|
48 |
|
|
|
|
காத
கப்படு கள்வரோர் மூவரும்
பாத லத்ததி பன்படைச் சேவகர்
நீதி மார்க்கத்து நின்றுவ ழிப்பறி
ஏதஞ் செய்யுமி டும்பரெக் காலுமே.
|
49 |
|
|
|
|
காண்ட
கும்படு பாதகக் கள்ளுநர்
சேண்ட லம்புகு மார்க்கஞ்சி தைப்பவர்
தீண்டி டாதுஞ்சு டுங்கொடுந் தீயவர்
மாண்ட வப்பொருட் சூறைசெய் மாற்றலர்.
|
50 |