பக்கம் எண் :

451

  மூண்ட வெம்பகை யாவுமு ருக்கிட
ஈண்டு காறுந்து ணைபுரிந் தெம்பிரான்
ஆண்டு வந்தவ ருட்செய லாய்தியேல்
வேண்டு மொவொரு சான்றிதின் வேறினி.

59
   
  என்று மெய்விசு வாசத்தி யல்பெலாம்
நன்றெ டுத்துரை யாடிந லந்திகழ்
மன்றன் மாநக ரத்துவ ழிக்கொடு
நின்றி டாதுமுற் சென்றனர் நீர்மையார்.
60
   
                விசுவாச விளக்கப் படலம் முற்றிற்று.
   
 
கார்வண்ணப் படலம்
 
   
  இவ்வா றாக வைதிக மார்க்கத் தியல்பேசிச்
செவ்வே சென்றார் சென்னிழ லேபோற் றிரிவின்றி
ஒவ்வா வேடத் தோரறி வீன னுடனேக
அவ்வா றோரா தேகினர் சின்னா ளறவோரே.
1
   
  ஏகுழி முன்னிட் டாங்கொரு சாரே யிருகூறாய்
மாகத லத்துப் பாதைபி ரிந்த மரபுன்னிப்
போகுவ தெங்ஙன் மேலினி யென்னாப் புகல்முட்டி
ஆகுல முற்றே நின்றுதி கைத்தா ரதுபோழ்தில்.
2
   
  கோலிய பேயோ காரிரு ளேயோ கொதிகொள்ளும்
ஆலம தேயோ பாதக மோதீ யவையெல்லாஞ்
சாலவி ருந்தை போலுரு வாய்ந்தோர் தநுவாக
ஞாலமி சைக்குங் கார்வண னென்பா னவையுள்ளான்.
3
   
  நஞ்சுக லந்த பாலமிர் தேபோ னயவஞ்சம்
விஞ்சவி ளைக்கும் வாய்மொழி யாளன் வினைபொல்லான்
நெஞ்சினி ருண்ட மேனிபு தைப்பா னிலவீனுங்
கஞ்சுகி போர்த்த கள்வன டுத்துக் கரைவானால்.
4
   
  எங்குசெல் குற்றீ ரேனிவ ணிற்பீ ரெமர்போல்வீர்
சங்கட மென்கொல் சாற்றுதி ரொல்கல் தகவன்றால்
பங்கமி லீரென் றின்னுரை யாடிப் பகர்வான்போல்
வெங்கடு நெஞ்சன் வேதியர் தம்மை வினவுங்கால்.
5