பக்கம் எண் :

452

  மாசறு சுத்த வைதிகர் தாமு மதிவல்லோய்
நாசம்வி ளைக்குந் தேசம்வி டுத்திந் நடைகூடி
ஈசன கர்க்குப் போதுமி வற்றி னெதுஞான
தேசிக மார்க்க மென்றுள நாடித் திகைக்கின்றேம்.

6
   
  என்றுதெ ரிக்க விச்சக னென்னு மிருள்வண்ணன்
ஒன்றிய நண்பீ ருன்னத வானத் துயரோங்கன்
மன்றன கர்க்கே செல்லுவல் யானும் வழியீது
நன்றுடன் வம்மின் வம்மினெ னாமுன் னடைகொண்டார்.
7
   
  பொன்னே யன்ன புங்கவர் வேதப் பொறிகுன்றி
என்னோ தேரா தின்னுரை நச்சி யிகல்வெயயோன்
பின்னே சென்றா ரென்னிலி யாரே பிரபஞ்சத்
தொன்னா ரைத்தோந் தொல்லையொ ரூஉமெய் யுரவோரே.
8
   
  அப்புலை யன்பின் னாழ்படு கொப்ப மறியாமே
குப்புற நாடுங் கொல்சின வேழக் குலமேபோல்
செப்பரும் வேதச் செந்நெற விட்டு ஜெகசாலத்
தப்புவ ழிப்பட் டாரணர் சென்றார் சதிதேரார்.
9
   
  போயினர் முன்னே காவதம் வஞ்சப் பொறிமல்கிச்
சேயொளி குன்றிக் காரிருள் துற்றிச் சிறைதோறும்
பேயுழல் பாபத் தூறடா கானிற் பிரபஞ்ச
மாயவ லைக்குள் ளாகிவி ழுந்தார் மறையோரே.
10
   
  அவ்வயின் முன்செல் லிச்சக வஞ்சன் னறவோர்தாந்
தெவ்வலை யிற்சிக் குண்டுதி யங்குஞ் செயல்கண்டான்
எவ்வம றைக்கும் போர்வையை வீசி யிருள்வண்ண
வெவ்விய மேனி தோன்றிட நின்றான் வெருளுற்றார்.
11
   
  அந்தோ வந்தோ விச்சக நச்சி யசுணம்போல்
முந்தோ ராதே மோசவ லைக்குண் முழுகுற்ற
சந்தா பத்துக் கென்செய்து மென்னாத் தழலன்ன
வெந்தா பத்தாற் சிந்தையி னைந்தே மிகையோர்வார்.
12
   
  நாயக னூலி னன்னெறி காண்பா னனியாய்வுற்
றாயர ளித்த தூயப டங்கொண் டறிகில்லேம்
நேயமோ டுய்த்த நல்லுரை யுள்ளே நெறிதப்பி
மாயவ லைப்பட் டாருயிர் மாய்வே மதியில்லேம்.
13