|
கைப்படு
தீபங் கொண்டுகி ணற்றிற் கவிழ்வார்போல்
மெய்ப்படு ஞான வித்தக முற்றும் விழிமூடிப்
பொய்ப்படு வஞ்சப் புன்னெறி புக்குப் புலைமேவி
இப்படு மோசத் தெய்தின மெவ்வா றினியுய்வேம்.
|
14 |
|
|
|
|
பொற்புறழ்
போர்வை கண்டும ருண்டேம் புலைவாயின்
சற்பனை யோரேம் பேசிய வின்சொற் சதுராலே
அற்புத மார்க்க விற்பன மும்போ யறிவும்போய்க்
கற்பனை யாலே கற்பிள வெய்தக் கரைகின்றேம்.
|
15 |
|
|
|
|
மங்கள
மல்கிய வாண்முகம் வாரிச மலரேனும்
இங்கித வாய்மொழி சந்தன சீதள மிணையேனுஞ்
சங்கைய றப்படு துர்ச்சன ருக்கிரு தயமோரில்
வெங்கன லின்சிவை யாமெனன் மேலவர் விதியன்றோ.
|
16 |
|
|
|
|
துன்றிருள்
வண்ணன் கொன்றுழல் கூற்றின் றுணையுள்ளந்
கன்றிய மாயக் கள்வனி வன்கை விடுபட்டுப்
பொன்றிணி சீயோன் மன்றன கர்க்குட் புகுவேங்கொல்
என்றிவை பன்னி யாவித ளர்ந்தங் கிடைகாலை.
|
17
|
|
|
|
|
வேறு. |
|
|
|
|
|
புண்ணி
யத்தடம் பூத்தபொற் றாமரை வதனந்
தண்ண ளிக்கர சிருக்கையாச் சமைந்துள தடங்கண்
எண்ண ருஞ்சுவைத் தெள்ளமு தெழிற்றிரு வசனம்
உண்ணி லாவுமெய் யன்பொளி திவள்திரு வுருவம்.
|
18 |
|
|
|
|
அஞ்ச
லஞ்சலென் றருள்புரி தருமப யாஸ்தஞ்
சஞ்ச லங்களைந் திடவிரை தருதிப் பாதம்
அஞ்சு காயத்தின் வடுத்திக ழவயவக் காட்சி
விஞ்ச வேதியர் விழிக்கெதிர் தோன்றினர் விமலன்.
|
19 |
|
|
|
|
கண்டு
கண்டிரு கைத்தலஞ் சென்னியிற் கவினத்
தெண்ட னிட்டுளங் கசிந்தழு தேங்கினர் திகைத்தார்
உண்டு கொல்லினி யுய்வெமக் கெனப்பிழை யுள்ளி
எண்ட போதனர் நாணின ருரையவிந் திருந்தார்.
|
20 |
|
|
|
|
எந்த
வூரெங்கு செல்குதிரிருட்படு கானில்
வந்திம் மாயவெவ் வலையிடை மறிந்ததென் வகுத்துச்
சிந்தை யுள்ளுறை தெரிபவர் தெரிக்கெனத் தெரித்தான்
முந்தையுற்றவா றனைத்துஞ்சொன் முறையறி முதியோன்.
|
21 |