|
வேத்தி
ரக்கர வித்தகன் வேதியன் விதந்த
மாத்தி ரத்தினி யஞ்சன்மின் வஞ்சவிச் சகன்வாய்ச்
சூத்தி ரத்தினுந் தூதவே டத்தினுந் தூய
பாத்தி ரன்னென மருண்டனி ரிதுபர மார்த்தம்.
|
22
|
|
|
|
|
நன்று
நன்றென நாசபா சத்தினை நறுக்கி
ஒன்றி யென்னுடன் னம்மினென் றூர்த்தநூ னெறியைச்
சென்று கூட்டினர் தெருட்டினர் சென்முறை திகழ்த்தி
நின்று வேதியர்க் கடிந்திது புரிந்தனர் நிமலன்.
|
23 |
|
|
|
|
மறிதி
கழ்திய வானந்த மலைக்கலக் குரவர்
குறிதி கழ்த்திய படந்தந்து கொற்றவ னகர்க்கு
நெறிதி கழ்த்திய நீர்மையை மறந்துநீள் வஞ்சப்
பொறிதி கழ்த்திய கொடுவலைப் புக்குழன் றயர்ந்தீர்.
|
24 |
|
|
|
|
மண்டலத்தெம
ராயெமை வழிபடு மகவாய்த்
தொண்டு பட்டவர் தம்மையாங் குறிக்கொண்டு தொடர்ந்து
விண்ட லம்புகுத் துவமிடை விதிவிலக் கிகப்பிற்
றண்ட னைப்படுத் துவநம ராஜ்ஜிய தருமம்.
|
25
|
|
|
|
|
செப்பு
மாறினி யென்னெனச் சினக்குறி மல்கிக்
குப்புறுத்தியங் கவர்தமைக் குணப்படு மட்டாத்
துப்பு றழ்ந்ததந் திருக்கர வேத்திரந் துணிய
விப்பி ரர்க்குடல் சிவப்புற வடித்திது விளம்பும்.
|
26 |
|
|
|
|
உளந்தி
ரும்பிமெய்ப் பத்தியோ டூர்த்தநூ னெறியில்
வளர்ந்த ருந்திரு நகரையே குறிக்கொண்டு வாணாள்
அளந்த மட்டுநல் லறங்கடைப் பிடிமினென் றன்பிற்
கிளந்து செல்கென விடுத்துடன் கரந்தனர் கிரீசன்.
|
27 |
|
|
|
|
உடையி
ழந்துழி யுதவுதங் கையென வலைப்பட்
டிடையுங் காலையுய்த் தீட்டுபே ருதவியை யெண்ணி
நடைய றிந்தமெஞ் ஞானியர் நன்றியோ டேத்தி
விடையு கந்துபெற் றேகினர் மேதகு நெறியில்.
|
28 |
|
|
|
|
ஆயர்
செய்நன்றி யறிந்திடா விழிகுண வழிம்பும்
மாய விச்சக வாய்மொழி மதித்தபே தைமையுந்
தூய பாதையை விலகிய துணிகரச் செயலும்
பேயன் பின்தொடர்ந் தவனடி பிடித்தபொல் லாங்கும்.
|
29 |