|
முற்று
பேரிடர் மூடிய முறையறிந் தீசன்
உற்ற டுத்துவந் துயிரளித் துதவிய வுரித்துங்
குற்ற மின்மதி புகன்றுளந் தெருட்டிய குணமுஞ்
செற்ற மோடடித் தருள்புரி திருவுளக் குறிப்பும்.
|
30 |
|
|
|
|
அகத்து
மல்கிய ஜீவவித் தனைத்துநம் மீசன்
முகத்து மல்கிய வருட்டுளி தோய்தலின் முளைத்து
மிகத்தெ ருண்டமெய் யுணர்ச்சியின் விதந்துரை யாடி
மகத்து வம்புனைந் தேத்தினர் வழிக்கொடு போனார்.
|
31 |
|
|
|
|
கார்வண்ணப்
படலம் முற்றிற்று. |
|
|
|
|
|
|
|
|
|
|
|
மாக
நாயகன் றிருவருட் டுணைமையின் வலத்தான்
மோக விச்சக தேசத்தை முற்றும்விட் டொருவித்
தேக தத்துவத் தளர்வினை யசதியைச் செறிக்குஞ்
சோக பூமிசென் றடைந்தனர் சுருதிநூல் வலவர்.
|
1 |
|
|
|
|
மன்னு
யிர்க்கெலா முரிமையே மறுமையாத் திரிகம்
என்னி னுஞ்சில ரன்றிமற் றெவருமிங் கெய்தார்
பன்னு மாலுறு சோகபூ மியினலம் பருகா
முன்ன ரேமுடித் திடுவரங் கிடைக்கிடை முறிந்து.
|
2 |
|
|
|
|
இருந்தி
ருந்திடைந் தேங்கலு மெழுந்துதள் ளாடி
வருந்த லும்பொறி மயங்கலுந் தியங்கலு மறுகிப்
பெருந்த கைக்குணம் பிறழ்ந்துபே துறுதலும் பேணி
அருந்த லுந்துயில் பொருந்தலு மந்நிலத் தியற்கை.
|
3 |
|
|
|
|
முதுமை
யாகிய வாடைவந் துடலிடை முயங்க
மதிம யங்கிவை திகநடை தளர்ந்துகண் மருண்டு
விதிநி டேதத்து விழிப்புறா விதந்தனை மறந்து
புதுமை யாத்துயில் பொருந்தலே யந்நிலப் புதுமை.
|
4 |
|
|
|
|
இற்ற
தாகிய படப்பையை வேதிய ரெய்தி
மற்றி தானந்த சைலத்து மாதவர் வகுத்துச்
சொற்ற சோகமா நிலமெனத் தம்முடற் சோக
முற்ற வாறுகண் டுணர்ந்தன ராண்டுற்ற வொல்லை.
|
5
|