பக்கம் எண் :

456

  துருவி யேகினர் தூரமோர் சிறிதுகண் டுஞ்சக்
கருவி யாயமென் காறவழ்ந் துடலிடைக் கரப்ப
ஒருவ ருந்துயில் விழித்துணை பொதிதலு முரவோய்
இருவ ருந்துயின் றெழுதுமோர் கடிகையென் றிசைத்தான்.

6
   
  தூய நம்பிக்கை சொற்றசொல் லயிலுளந் தொளைப்பக்
காய மிக்குற நடுங்கியுங் கலங்கியுங் கவன்றும்
ஆயர் சொற்றிற மறந்தனை யேகொலா மைய மாய
நச்சுறக் கத்தினை வரைதலே மரபாம்.
7
   
  அறங் குலாவுநன் மதிவலோ யாரணத் தௌழ்தம்
உறங்க வோவுண்டு தெவிட்டின மோட்டத்தை யொடுக்கேல்
திறங்கு லாவிய பந்தயப் பொருணிலை தெரிந்தீண்
டிறங்கு சென்னியை நிமிர்த்துமுன் னிடுதியா லெம்பி.
8
   
  ஐய கேளறம் பொருளின்பம் வீடென லாய
மெய்ய வாம்புரு ஷார்த்தங்க ளொருங்குடன் விலகும்
மையல் கூர்துயில் விளைத்திடு மானிடப் புரையில்
பொய்ய ளைந்ததீ வினையெலாம் புதுக்குடி பொருந்தும்.
9
   
  உறக்க மேயிக பரநன்மைக் குட்பகை யாகும்
உறக்க மேசுய முயற்சியை யொருங்கறத் துடைக்கும்
உறக்க மேபகைக் கொருதுணை யாயுயி ரொழிக்கும்
உறக்க மேவறு மைக் முலகில்.
10
   
  இனைய வாதலி னெம்பிநீ கண்முகிழத் துறங்க
நினையல் நித்திரை சத்துரு வெனுமபுவி நீதி
முளைவ னல்கிய கலிக்கமொன் றுளததை முடுகி
வனைவ லென்றிரு விழியினுந் தீட்டினான் மறையோன்.
11
   
  சிறக்கு நன்மருந் துதவலு நம்பிக்கை தெருண்டான்
உறக்கங் காதம்போ யொளித்ததங் கோரிரு வோருந்
துறக்கங் கிட்டிய தாமெனத் தூநெறி நடந்து
மறக்கொ ணாத்திரு வாக்கெடுத் துரைத்தனர் வருவார்.
12
   
  ஆய காலைமா யாபுரிச் சந்தையி லமர்ந்து
தீய கொண்டுவிற் றூதியந் திரட்டுநீ தெருண்டு
தூய யாத்திரை செயமனந் துணிந்தொருப் படற்கு
மேய காரணந் தெரிக்கென நம்பிக்கை விரிப்பான்.
13