பக்கம் எண் :

457

உய்வ ழித்திறந் தெருட்டியு முதவிசெய் தளித்துந்
தெய்வ பத்தியில் வளர்த்துநல் வழிவிடிற் சினந்தும்
மெய்வ ழித்துணை யாகியும் புரந்தனை மேலோய்
ஐவ கைப்பெருங் குரவனு நீயெனக் கத்த.

14
 
கண்டு யின்றிடாக் கலிங்கமிட் டருள்வழிக் காத்துக்
கொண்ட ணைந்தனை யின்னுநீ குறிக்கொண்டு கோமான்
விண்ட லம்புகு காறுமெற் காப்பதுன் வேலை
தொண்ட னேன்செய்கைம் மாறுனக் குண்டுகொல் துணியில்.
15
 
ஈது நிற்கயா னிந்நெறி பிடித்தகா ரணமென்
ஒது கென்றனை யித்திற முணர்ந்துரை யாடிப்
போது வேமெனிற் றுயிலெமைத் தணந்துபின் போகுஞ்
சாது மார்க்கத்துக் கடுத்ததாங் கேளெனச் சாற்றும்.
16
 
சற்ப னைக்கெலா முறையுண்மா யாபுரிச் சந்தை
விற்ப னைப்பொருள் யாவையு மாயமாம் விரும்பிக்
கற்ப னைப்பொரு ளீட்டியோர் யாவருங் கவிழ்ந்தார்
நிற்ப தன்றிந்த வாழவெனு நிண்ணயந் தெரிந்தேன்.
17
 
நின்னிற் றோன்றுசன் மார்க்கத்தி னீதிநிண் ணயமும்
பொன்னிற் றோன்றிய மெய்விசு வாசத்தின் பொலிவும்
என்னிற் றோன்றிய வுணர்ச்சியிற் பதிந்தன வெந்தாய்
முன்னிற் றோன்றிய வாடியிற் றோன்றிய முகம்போல்.
18
 
குத்தி ரக்குழு வீண்டிவெங் கொலைக்களப் படுத்திச்
சித்தி ரக்கொலை செயப்பட்ட தீர்க்கவிஸ் வாசி
பத்தி மெய்வயி ராகத்தைப் பவித்திரச் செயலை
வித்த கக்கலை ஞானத்தைக் கண்டுளம் வெருண்டேன்.
19
 
உண்டெ னப்படு மெய்விசு வாசத்தி னுரத்தைக்
கண்டு கேட்டுளங் கவன்றதும் வெருண்டதுங் காண்டி
அண்டர் நாயகன் றொழும்பனா யவித்தையைப் போக்கிப்
பண்டு நன்னெறி பற்றியான் படர்தற்கு மூலம்.
20
 
பாவி யென்றுளங் கவன்றனன் முடிவுன்னிப் பயங்கொண்
டாவி நைந்தன னாயினு மகத்துளங் குரித்து
வீவி லாதெழு முணர்வினை மென்மெலப் புதைப்பான்
ஆவ லுற்றிராப் பகலெலா முயன்றன னறவோய்.
21