பக்கம் எண் :

458

  நம்ப னாவிநின் றுளத்திடைப் பொருத்துநல் லொளியை
எம்பி நீயவித் திடமுயன் றதுவென்னென் றிசைத்தி
இம்ப ரேயெனை யாட்கொள வென்னுறத் திறுத்த
உம்பர் நாயகன் கிருபையென் றுணர்ந்திடா மடமை.

22
   
  முற்றும் பாவத்தின் முயங்கிய முயக்கம்விட் டிடாமை
உற்ற டைந்ததீத் தோழரை யொருவுகில் லாமை
துற்று பாவத்தின் சுமையணுத் துணையுந்தோன் றாமை
இற்றெ லாமதி யீனமுங் காரண மெந்தாய்.
23
   
  ஜெகத்து மெய்ந்நிழல் புதைத்திட முயல்பவர் திறம்போல்
அகத்து மெய்யொளி யவிக்குமா றறமுயன் றிடினும்
மகத்து வச்செய லாலகத் துணர்ச்சிமா யாது
மிகத்தெ ருண்டெழு முறைமையை விள்ளுவல் கேட்டி.
24
   
  சாது மார்க்கரைக் காண்டலுந் தகைப்படு சுருதி
ஒது கீதைவந் துறுசெவி மடுத்தலு மொடுங்கா
வாதை நோய்கண்டு கலங்கலு மலங்கலுங் கடுகி
ஏது வின்றிமூச் சொடுங்கல்கண் டஞ்சியேக் குறலும்.
25
   
  மேலை நாணடுத் தீர்வையை நினைந்துளம் வெருண்டு
காலை மாலையுங் கவன்றுள நடுங்கலும் பிறவுஞ்
சால மெய்யுணர் வெழுப்பின நன்மனச் சான்றுங்
கோலி மெயம்மனஸ் தாபத்தை விளைத்தது குரவ.
26
   
  மெய்யு ணர்ச்சியை யொருபுறத் தொதுக்கினும் வெகுண்டு
துய்ய நன்மனச் சான்றெனைக் கடிந்திடுஞ் சுடுசொல்
ஐய தாங்கரி தாதலின் மெய்மனஸ் தாபம்
உய்யு மாறுளத் தூன்றிநின் றோங்கிய துரவோய்.
27
   
  வைகல் சிற்சில கழியவு மிடைக்கிடை மரணங்
கைக லந்திடி லென்செய்வ லென்றுளங கலங்கி
மைக லந்ததுன் மார்க்கசீ லத்தையும் வளைந்த
பொய்க லந்ததீ நட்பையும் போக்கின னொருங்கே.
28
   
  வைதி கம்பெறு சமயசீ லங்களை வழுவில்
மெய்தி கழ்ந்தவான் விதிநிடெ தங்களை விழைந்தென்
கைதி கழ்ந்தமெய்த் திருமொழி யகத்துளே கவின
உய்தி றங்கடைப் பிடித்தன னல்லொழுக் குவந்து.
29