|
இனைய
வாத்திரி கரணமொத் தியற்றுநல் வினைகள்
எனிய வேனுந்தீ தொடுகலந் தலதிலை யென்னா
நினைவு மூட்டிமேன் மேலுநெய் சொரிந்தென நிகழ்த்தி
எனைவ தைத்தெரி மடுத்ததிங் கென்மனொ சாக்ஷி.
|
30 |
|
|
|
|
உள்ளு
ளேபுக லுளக்கரி யுரையெலா முண்மை
வள்ள லாருமென் பிழையெலாம் வரைந்துவைத் தனருட்
கள்ள மாயநற் கருமங்கள் கதிக்குரை யேறா
எள்ள னைத்துநீ தியுமிலை யுய்குவ தெங்ஙன்.
|
31 |
|
|
|
|
புதிய
சீலமு மொழுக்கமும் புனிதமு மருவி
விதிவி லக்கினி யனுட்டிப்ப னாயினும் மேலை
முதிய பாவத்துக் கென்செயக் கடவன்யான் முத்திக்
கதிப னாணையிற் றீச்சிறைப் படுத்துவ ரன்றோ.
|
32 |
|
|
|
|
அன்றன்
றைக்கட னன்றன்றைக் கிறுப்பினும் வறியோர்
தொன்று பட்டவப் பெருங்கடன் றொலைக்கும்மா றெவன்கா
சொன்று மீதியின் றாய்க்கட னொருங்கிறுப் பளவுந்
துன்று வெஞ்சிறைப் படுத்தலே தொல்லுல கியற்கை.
|
33 |
|
|
|
|
தீது
றாதநற் கருமமில் லேன்சிறி தெனினும்
நீதி யும்மிலன் பாவதன் டனைக்கெதிர் நேரே
போது கின்றனன் புகலிடம் பிறிதெங்கு மில்லேன்
ஏது செய்குவ னிரக்ஷணிக் கெனக்கவன் றிடுநாள்.
|
34
|
|
|
|
|
வேறு.
|
|
|
|
|
|
உத்தமந்
திகழு மேனி யொண்மதி நிதானி யென்னும்
வித்தகன் வரக்கண் டொல்லை விழுத்தகு மரவி னேற்றுச்
சித்தசஞ் சலமெற் குற்ற திறனெலாந் தெரியச் செப்பி
எத்திற மேனு நன்கொன் றியம்புகென் றிரந்து நின்றேன்.
|
35 |
|
|
|
|
சேய்முக
வாட்டங் கண்டு சிந்தனை கசிந்து போற்றுந்
தாயரின் முகந்தை வந்து தணப்பில்பே ரன்புள் ளூறி
வாய்மலர்ந் தொழுகல் போலு மைந்தநீ கலங்க லென்னாத்
தூயர க்ஷணிய போதந் தொகுத்துரை யாட லுற்றான்.
|
36 |
|
|
|
|
உன்னுளத்
தெழுந்த பாவ வுணர்ச்சியு முள்ளச் சான்றும்
முன்னுறீஇக் கடிந்த வாக்கு முழுமனஸ் தாப மாய
இன்னலு நினையீ டேற்ற வெம்பிரான் குறிக்கொண் டுன்பால்
பன்னருங் கிருபை யுய்த்த பரிசென மனத்துட் கோடி.
|
37
|