பக்கம் எண் :

460

ஞானநூ லனைத்துங் கற்று நற்கரு மங்க ளாற்றித்
தூனடை பயின்ற போதும் ஜென்மத்தே தொடுத்து நின்ற
ஈனமாங் குணதோ ஷங்க ளியைதலால் யாவுந் தீதாங்
கானனீ ரருந்தித் தாகங் கழியுமோ கருதுங் காலை.

38
 
கருவிலே விடம்போற் பாவங் கலந்துபின் கதித்துப் பாழ்த்த
உருவிலு மனாதி யந்தக் கரணத்து மொருவா தாக
மருவிநின் றுடற்றி நாறு மரணபா தலத்தைக் காட்டித்
தெருவிலே விடுக்குஞ் செய்கை ஜெகங்கண்டுதெருளா தின்னும்.
39
 
கற்பனை பத்து மோம்பிக் கைக்கொளல் கடமை யேயாம்
கற்பனை மீறிச் செய்யுங் கருமங்கள் பாவமாகும்
கற்பனை காத்து மேனற் கருமங்கள் புரிவ தன்றோ
கற்பனை களுக்கு மேலாக் கதித்தபுண் ணியமாந் தேரில்.
40
 
கண்ணிய கடமைப் பாட்டைக் கருத்துறச் செய்ய கில்லா
மண்ணியன் மாந்த ரேயாம் மாசறு விதிக்கு மேலாப்
புண்ணியந் திரட்டி முத்திப் புரையில்பே ரின்பங் கூட
எண்ணிய வெண்ண மென்று மேழைமைப் பால தேயாம்.
41
 
தருவிதி விலக்கே யிந்தத் தரணியை யொருங்கு கூட்டி
வெருவரும் பாவ தோட வெஞ்சிறைப் படுத்திற் றம்மான்
திருவுள மிரங்கித் தம்மோர் திருக்குமா ரனைவி டுத்துப்
பொருவரு மிரக்ஷை யீட்டி மீட்டனர் புவியை மேனாள்.
42
 
ஜென்மநாட் டொடங்கி முற்றும் ஜீவநத ளளவும் பாவ
கன்மமாந் தீட்டு றாமுக் கரணமும் புனித மேய
தன்மரூ பன்செய் தாக்குந் தபோபலங் கிடைத்தா லன்றி
நன்மையாம் ஜீவ ரக்ஷை நரருக்கின் றாகு மன்றே.
43
 
பூதலப் பரப்பில் யாரிப் புண்ணிய மூர்த்தி யாய
மாதவ னென்னி லின்றும் வடுத்திகழ் மேனி யோடு
தாதைபாற் ருவ லோக சரணிய னாகத் தங்கி
மேதினிக் கிரைசூ நல்குங் கிறிஸ்துவாம் விமலன் மேனாள்.
44
 
மனிதஜீ வருக்குந் தேவ மகத்துவத் தினுக்கு மூடே
நனிதிகழ் மத்தி யஸ்த நரதேவ மூர்த்தங் கொண்டு
வனிதைபாற் றோன்றித் தூய வரன்முறை விதியை யோம்பிப்
புனிதஜீ வியத்தை யுய்த்த புதுமையே புதுமை யாமால்.
45