பக்கம் எண் :

461

  உலகெலாஞ் சமழ்த்த பாவ மொருங்கொரு தனியே தாங்கி
விலகருஞ் சிலுவை மீது விண்ணின்று விழுத்த நீதி
அலகறு தண்ட மேற்றிங் குயிப்பாலி யமலற் காக்கி
நிலவுல கருக்கென் றுய்த்த நீதியே ஜீவ நீதி.

46
   
  பொன்றிய புனித மேனி பூசமா தியினும் புக்கு
நின்றுமன் பதைகட் கெல்லா நித்திய ஜீவன் மல்க
வென்றியோ டுயிர்த்தெ ழுந்த விந்தையை விசுவ சித்துள்
ளொன்றுமெய் யடிய ரன்றோ வுன்னத பதம்பெற் றுய்வார்.
47
   
  இத்திரம் பரம ராஜ்யத் திளவர சாய வெம்மான்
உய்த்தர க்ஷணிய மார்க்கத் துண்மையை விசுவ சிக்கிற்
சித்தசஞ் சலம்போம் நீதி திகழ்ந்தொளி கிளைக்கு நின்னை
மொய்த்தபா பாந்த கார முற்றிலும் விடியு மன்றே.
48
   
  ஆண்டகை நீதி யென்னை யடையுமா றெவன்கொ லென்னாத்
தேண்டுதி மெய்யன் போடு திகழ்விசு வாசமுன் னிற்
காண்டகக் கவினிற் றென்னில் கருணையாற் றொழுக்கீ
                                       தொன்றோ
வேண்டுநன் னிதியம் யாவும் வியனகப் புலந்தந் துய்க்கும்.
49
   
  நன்மைசால தேவ மைந்தன் நடுநின்று நரருக் கேயாய்
வன்மைசான் மநுட தன்ம வரம்பறா தொழுகி நீதிப்
பொன்மலை குவித்துத் தம்மைப் புகல்புகுந் தவர்க்கு நல்குந்
தன்மையை நம்பிச் சேறி சான்றுமெய் யடியார் சங்கம்.
50
   
  கடைப்படு வன்க ணீசப் புலையனேன் கணிப்பில் பாவ
முடைத்தொழு நோயி னாக்கை முயங்கியேன் றுணிந்து முன்சென்
றடைக்கல மெனலாங் கொல்லோ வருவருக் காதென் கண்ணிர்
துடைப்பரோ புனிதரென்னா வையுறீஇத் துளங்கல் கேண்மோ.
51
   
  பொருந்துவெங் கொடிய பாவப் பொறைசுமந் திளைத்துச் சிந்தை
வருந்துவீர் வம்மின் வம்மன் வந்திளைப் பாறி யென்னோ
டிருந்துண வருந்து மின்னென் றெம்பிரான் விளிக்கு மின்சொற்
றெரிந்திலை போலு மெம்பி செவிகொடு செவிகொ டின்னே.
52
   
  உரைசெயற் கரிதெம் மைய னுபதேச மொழுக்கஞ் சீலம்
விரைசெறி கிரியை துன்ப மிருத்துவே தனையிவ் வெல்லாம்
புரையற விளக்கு மிந்தப் புத்தகங் கொண்ணீ யென்றீந்
துரைநிலை பிசகா திந்த வுலகொழிந் திறினு மென்றான்.
53