பக்கம் எண் :

462

  என்னுளங் குவிந்த தேனு மீசனோர் குமார வள்ளல்
சந்நிதி குறுகி யாங்கு சாற்றும்வின் ணப்ப மாவ
தென்னென வறியகில்லே னியம்புகென் றிரந்தேனாகப்
பொன்னெனப் போற்று மன்றாட் டொன்
                       றுளம்பொறித்துப்போனான்.
54
   
  வந்தனத் தோடு நன்றி வழுத்தியான் றிருமித் தக்கோய்
சிந்தையிற் பொறித்த செஞ்சொல் சிலையெழுத் தாக நிற்ப
நொந்துடைந் தூறு பட்டு நொறுங்குண்ட விதயத் தேனாய்
அந்தரங் கத்தை நாடி யடைந்தன னவலித் தேங்கி.
55
   
  உன்னத பரம ராஜ னொருதிரு வோலக் கத்துச்
சந்நிதி நினைந்து கிட்டித் தாளிணை முடக்கி நின்று
பன்னருங் கருணை யுள்ளிப் பத்தியோ டிருகை கூப்பிச்
சென்னிதாழ்த் திறைஞ்சி யன்பிற் சிந்தனை கசிந்து போற்றி.
56
   
  ஆதிமெய்த் திருவாக் காகி யவிரொளிப் பிழம்பு மாகிப்
பூதலம் புரக்க வந்த புண்ணியப் புனித மூர்த்தி
மாதயா நிதியே ஞான வரோதய கிரியே நின்சீர்
பாதபங் கயம்பல் லாண்டு பல்லாண்டு வாழி வாழி.
57
   
  அறக்கொடும் பாவி கல்லா வசடர்க்குள் ளசட னஞ்சா
மறக்கொடும் புலைய னாய வஞ்சகப் புலைய னேன்யான்
துறக்கநாட் டரசன் சீற்றச் சுடுதழற் சுவாலைக் கஞ்சிச்
சிறக்குநின் சரண நீழ லடைக்கலஞ் சென்று சேர்ந்தேன்.
58
   
  என்னிகர் பாவி யில்ல ரெனினும்யா னேழைப் பாவி
இன்னலுற் றழுங்கும் பாவ ஜீவகோ டிகளுக் கென்றும்
நின்னிக ராய தஞ்சம் பிறிதிலை யென்ன நேடிப்
பொன்னடி நீழல் வந்து புகுந்தனன் போது கில்லேன்.
59
   
  இரங்குக பாவ பார விருஞ்சுமை யாற்ற கில்லேன்
இரங்குக வேழைப் பாவி யெனக்கொரு கதிவேறில்லை
இரங்குக தேவ கோப வெரிவிழுந் தழிக்கா முன்னம்
இரங்குக ஜீவ ரக்ஷைக் கென்றுரு வெடுத்த தேவே.
60
   
  என்னுயிர்க் குயிரு நீயே யீடேற்று மீச னீயே
மன்னுசற் குருவு நீயே வழிதடுத் தெனையாட் கொண்ட
முன்னவன் றானு நீயே முற்றுநீ சுற்று நீயென்
றுன்னைநன் கறிய நீயென் னுளத்தறி வுறுத்து கெந்தாய்.
61