|
மைவிளை
யிதய மாய வகலுளே மலினம் போக்கி
மெய்விசு வாச மெனனும் வியன்றிரி கொளுவி மாறாத்
தெய்விக வருளை யூற்றித் திவ்விய சுடரை யேற்றி
நெய்விளக் கலர்த்தி யென்னு ணிலவிவீற் றிருத்தி நீண்டோய்.
|
62 |
|
|
|
|
உற்றமெய்
விசுவா சத்தா லுரிமையாம் பரம நீதி
மற்றது பெறுங்கால் ஜீவன் மல்குமேன் றுரைக்கும் வாய்மை
அற்றமில் விசுவா சத்தை யாக்கிநீ தியைத்தந் தாக்கன்
முற்றுநின் னருளின் செய்கை முறையன்றோ கருணை மூர்த்தி.
|
63 |
|
|
|
|
ஆழியிற்
பெரிதென் பேனின் னருட்பெருங் கிருபை தன்னை
வாழிநின் னன்புக் கெல்லை யாதென வழுத்து கிற்பேன்
பாழியம் புவியின் மிக்க பாவியேற் புரந்த வன்பென்
றூழிதோ றுலகமெங்கு முரைநிற்கு மென்ப தல்லால்.
|
64 |
|
|
|
|
எச்சிலே
விழையுங் குக்க லெனவிழி தொழில்செ யீனக்
குச்சித மான பாவி குவலயத் தென்னை யொப்பார்
நிச்சய மல்லை யில்லை நீசனேற் கிரங்கி யான்மப்
பிச்சையிட் டருளிப் பாவப் பிழையெலாம் பொறுத்தி யெந்தாய்.
|
65 |
|
|
|
|
கிளருமெய்ஞ்
ஞான போதங் கேடிலசன் மார்க்க சித்தி
வளர்விசு வாசக் காட்சி மாசறு புனித நீதி
உளமலி யன்பு மேலிட் டுன்றொழும் புவக்கு மாசை
விளையநின் னாவி நல்கி விடாதுகாத் தருள்வா யாமென்.
|
66 |
|
|
|
|
என்றிவ்வா
றாகப் பல்கா லிராப்பக லிதய நொந்து
நின்றுமன் றாடி வேண்டி நெட்டுயிர்ப் பெறிந்து சின்னாள்
குன்றிடாக் கருணை மல்குங் கோவிளங் குமார தேவன்
என்றெனக் கிரங்கு வார்கொல் லென்றுளங் கவலச் சென்ற.
|
67 |
|
|
|
|
ஆயிடை
நெஞ்ச மாழ்கி யாவிசோர்ந் தயதி மல்கி
நாயகன் நிருமுன் செல்ல விடைந்துள நலிந்த தேனும்
ஒயகிற் கிலன்மன் றாட்டை யுத்தம வுரைக ளெல்லாம்
மாயமி லுண்மை யென்றென் மனக்கொளக் கிடந்த மாண்பால்.
|
68 |
|
|
|
|
அன்றியுங்
கிறிஸ்து நீதி யலதெனைப் புரக்கத் தக்க
தொன்றுமின் றுலகத் தென்னு முண்மையும் ஜெபமின் றாயின்
மன்றமன் னிப்பு மின்றென் வாய்மையு மன்றாட் டொன்றிப்
பொன்றினு நலமென் றோர்ந்த போதமுங் காத்த வெந்தாய்.
|
69
|