|
இன்னுமொன்
றறவோய் கேட்டி யெம்பிரா னருட்ச காயம்
உன்னிலே தாழ்க்கு மேனு முவந்துகாத் திருத்தி யாயின்
முன்னுற வருந்தப் பாது முற்றுநிண் ணயமற் றொன்னாப்
பன்னிய சுருதி வாக்கொன் றுளத்துறப் பதிந்த தந்நாள்.
|
70 |
|
|
|
|
இத்தகு
முறைமை யாலென் னிதம்பின் னிடையா தாக
முத்திநாட் டரசன் மைந்தன் முன்னிலை யாகு மட்டும்
நித்தமுந் திருமுன் கிட்டி நின்றுமன் றாடு மிந்த
வித்தகப் பழக்க மெற்கு விடாப்பிடி யாய தெந்தாய்.
|
71 |
|
|
|
|
ஆங்கொரு
வைகல் பாவ வருவருப் பெனக்குத் தோன்றி
நீங்கருந் துக்க மல்க நித்திய கேட்டை யுள்ளி
ஓங்கிய பிரதண தாப முள்ளுறீஇத் தகப்ப வாற்றா
தேங்கிநெட் டுயிர்த்துச் சோகித் தின்னலுற் றிடையுங்காலை.
|
72 |
|
|
|
|
இகபர
மிரண்டி னுக்கு மிறைமைபூண் டெம்ம னோர்க்குப்
புகலிட மான ஜேசு புண்ணியப் படிவத் தோடு
முகவிழி கொளப்பொ றாத முதிரொளிப் பிழம்பி னூடென்
அகவிழி களிக்கத் தோன்று மற்புதக் காட்சி கண்டேன்.
|
73 |
|
|
|
|
அஞ்சலை
கலங்க வேண்டா மநாதிநித் தியபி தாவை
மஞ்சனா மெனைநே சித்து வரன்முறை விசுவா சித்துச்
செஞ்செவே பற்றி நிற்றி திடங்கொளென் றமுதச் செவ்வாய்க்
கிஞ்சுக மனைய கோல விதழ்விண்டு கிளக்கக் கேட்டேன்.
|
74 |
|
|
|
|
என்னுறு
நித்திய ஜீவ னிருவிழ களிக்கத் தோன்றி
முன்னிலைப் பட்ட தென்னா மொழிதிற னறியே னாகிச்
சென்னிதாழ்த் திறைஞ்சி யாண்டோய் ஜெவப்பெரும் பாவி
யேற்கும்
உன்னரும் பாவ மன்னிப் புறுவது கொல்லோ வென்றேன்.
|
75 |
|
|
|
|
பாவஜீ
வரைப்பு ரக்கப் பாருல குதித்த ஜேசு
தேவனோர் மைந்த னென்றுஞ் சிந்துசெங் குருதி யொன்றே
ஜீவனைப் புனித மாக்குந் திவ்விய வவிழ்த மென்றும்
மேவர வுயிர்த்தெ ழுந்த வென்றியே யிரக்ஷை யென்றும்.
|
76 |
|
|
|
|
உள்ளுணர்
விசுவாசத்தா லூக்கிநொந் துடைந்தென் பக்கல்
நள்ளிவந் தடையிற் பொல்லா நராந்தகப் புலைய னென்னா
எள்ளுறு பாவி யேனு மிகழ்ந்தவ மதித்தோர் போதுந்
தள்ளிடே னினக்குப் போதுந் தந்தவென் கிருபை யென்றார்.
|
77 |