இத்திற
நிகழ்ந்த பின்றையெம்பிரா னெனக்குள் ளுய்த்த
சத்திய வாக்கின் வண்ணந் தணப்பிலா விசுவா சத்தான்
முத்திநீ தியுமம் மான்மெய் முழுகுசோ ரியின்பி ராயச்
சித்தமும் லபிக்கு மென்னாத் தெள்ளிதி னுணர்ந்தேன் மேலும்.
|
78 |
|
|
நன்றியோ
டுள்ளி நாளு நயந்தடித் தொழும்பு பற்றி
ஒன்றிய சிந்தை யாற்கே யுரியவாங் கிறிஸ்தி யேசு
நின்றுகீழ்ப் படிந்து பார்க்கு நிருமித்த தண்ட மேற்றுப்
பொன்றியு மீட்டி வைத்த புண்ணியப் பொலிவென் றோர்ந்தேன்.
|
79 |
|
|
வேறு. |
|
|
|
இம்மெய்
வாக்கொளி யென்னித யத்துற
மைம லிந்தம னத்துயர் மாய்ந்தது
மெய்ம கிழ்ச்சிநி றைந்துவி ழிவழி
கைமி குந்துகண் ணிரெனக் கான்றதால்.
|
80 |
|
|
நந்த
மேசுக்கி றிஸ்துவை நம்பிய
அந்த ணாளரை யாங்கவர் சீலத்தைச்
சிந்தை யாரச்சி றக்குநண் பாற்றிட
இந்தி யங்கள்வி ழைந்தன
வென்னுளே.
|
81 |
|
|
குருசு
யர்த்தநங் கோக்கும ரேசனார்
தரிச னப்பலன் சாற்றுதி யென்றியேல்
பரிச ழித்தமுற் சீவிய பாவத்தைக்
கரிச றுத்ததுன் கண்கண்ட சாக்ஷியே.
|
82 |
|
|
மைந்தன்
மாசறு நீதியின் மாண்பினால்
தந்தை நீதித ரும்புவி ரக்ஷணை
சொந்த நீதிக றையுறத் தோய்தலின்
முந்து மாக்கினை முற்றுமென் றோர்ந்தனன்.
|
83 |
|
|
உள்ள
நாளள வும்முல கத்தினிக்
கள்ள மின்மனச் சான்றினைக் காத்துநான்
வள்ள லார்திரு நாமம கிமையை
நள்ளி நாள்விடு நாட்டம்வந் துற்றதால்.
|
84 |
|
|
எத்தி
றப்பகை நேரினு மென்னொரு
வித்த கன்கழல் விட்டிடு கிற்கிலன்
முத்தி கிட்லை வேனுமு றைமையிற்
செத்தி டற்குமோர் தீரம்வந் துற்றதால்.
|
85 |