பக்கம் எண் :

467

  கான கத்துறு கள்ளவ ழிக்கொடு
போன கத்தொழின் முற்றுறு புன்மையன்
கோன கத்துக்கு றிப்பறி யாமலிவ்
வான கத்துவ ழிநடைப் பட்டனன்.

3
   
  வீரி யந்திகழ் வேடத்த வத்தனை
ஆரி யன்னெறிக் கண்டற வோயுனக்
கூரி யாதிந்த பூர்த்தநெ றிவரக்
காரி யம்மெது கட்டுரை யாயெனா.
4
   
  கேட்டி யையகி ளர்தற்பி ரியமாம்
நாட்டி னின்றுது றந்துந லந்தரு
வீட்டு லோகம்பு குதவி ரும்பியிப்
பாட்டை பற்றிப்ப டர்குவன் யானென்றான்.
5
   
  அண்டர் கோன்கடை காவலர்க் கவ்வயிற்
கண்டு கொள்கென வுட்புகக் காட்டுவான்
உண்டு கொல்லடை யாளமு னக்கது
கொண்ட ணைந்தனை யோவெனக் கூறினான்.
6
   
  பற்றி கந்தப வித்திர வேதியன்
சொற்ற தோர்ந்தறி வீனனுந் தூயவ
முற்ற றிந்தமு ழுமுதல் சித்தம்யான்
தெற்றெ னத்தெரி வன்னது தேர்தியால்.
7
   
  புந்தி யாய்ப்புசிப் பன்சுக போகங்கள்
அந்தி சந்திஜெ பிப்பன றஞ்செயப்
பிந்து கிற்கிலன் பேணிய வரவர்
தந்த மக்குக்கொ டுப்பலத ரும்பொருள்.
8
   
  பத்தி லொன்றென்னு ரிமைப குத்ததை
முத்தி வேண்டிக்கொ டுப்பன்மு றைமுறை
சித்த சுத்திவி ரும்பிச்சி லதினம்
உத்த மத்துப வாசமு மோம்புவேன்.
9
   
  பிறந்த நாட்டையும் பெற்றுள வாழ்வையுந்
துறந்திம் மார்க்கம்பு கவுந்து ணிந்தனன்
அறந்தி றம்புகி லலதவெம் மாண்டவன்
மறந்து போவர்கொ லோவிந்த மாண்பெலாம்.
10